எபிரெயர், ஐந்தாம் மற்றும் ஆறாம் அதிகாரம் #1 57-0908M 1 …எபிரெயரின் புத்தகத்தினுடைய…அதன் பின்னர் நாம் 7-ம் அதிகாரத்திற்குள் சென்று மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம். அதன் பின்னர் நாம் மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்திலிருந்து மகத்தான நாட்களின் பாவ நிவிர்த்திகுள்ளாக சென்று, வேறுபிரிதல், பாவநிவிர்த்தியை வேறுபடுத்திக் காட்டுதல் போன்றவற்றைப் பார்க்கப் போகிறோம். அதன் பின்னர் அந்த மகத்தான விசுவாச அதிகாரமாகிய 11-ம் அதிகாரத்திற்கு செல்லப் போகிறோம், பின்னர், “பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு” என்று கூறப்பட்டுள்ள 12-வது அதிகாரத்திற்குள் செல்லப் போகிறோம். அதன்பின்னர் 13-ம் அதிகாரத்தில், “மனிதனுடைய கரங்களினால் கட்டப்படாமல், தேவனால் கட்டப்பட்ட நித்திய வீட்டைக் குறித்து, இந்த மகத்தான வீட்டை தேவன் மாத்திரமே கட்டி உண்டாக்கியிருக்கிறார்” என்பதைக் குறித்துப் பார்க்கப் போகிறோம். எவ்வளவு அற்புதமாயுள்ளது! 2 சற்று முன்னர் ஆராதனைக்குள் நுழைந்து, அங்கே பின்னால் அமர்ந்துள்ள நம்முடைய சகோதரியைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவளையும், அவளுடைய கணவனையும் காண்கிறேன். நேற்று நாங்கள் எங்களுடைய வழியில் வந்து கொண்டிருந்தபோது, அந்த ஒரு இடத்தின் குறுக்கே…பல வருடங்களாக இங்கே இந்தியானாவில் வேட்டை அதிகாரியாயிருந்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபடியால், எனக்கு இங்குள்ள சிறு மூலை முடுக்குகள் கூட தெரியும் என்று நான் எண்ணியிருந்தேன். நான் ஒவ்வொரு இடத்தையும் அறிந்திருந்தேன். ஆனால் நான் நேற்றைய தினம் அவர்கள் இருந்த ஒரு புதிய தெருவின் முனைக்கு செல்லாமல் வழி தவறிப் போய்விட்டிருப்பேன். 3 அந்தப் பெண்மணிக்கு நுரையீரல்களில் புற்றுநோய் இருந்தது, நிச்சயமாகவே கர்த்தர் அந்த ஸ்திரீயை குணப்படுத்தினார். நாங்கள் புறப்பட்டு சென்று…ஓ, இவையாவும் நிகழும்போது, நாங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தோம். சகோதரன் ராபர்ஸன், அநேகமாக இன்றைக்கு அவர் இங்கே உள்ளே இருக்கலாம். ஏனென்றால் நான் அவருடைய மனைவியும், சகோதரன் உட்ஸ் அவர்களும் உள்ளே இருப்பதைக் காண்கிறேன். சகோதரன் ராபர்ஸனும், நானும், சகோதரன் உட்ஸ் அவர்களும் அங்கே அந்த பழைய பெரிய திறந்த வாகனத்தில் இருந்தோம். நாங்கள் இந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கே அந்த குன்றின் உச்சிக்குச் சென்றிருந்தோம். கர்த்தர் நிச்சயமாகவே அந்தப் புற்றுநோயை அங்கு காண்பித்திருந்தார். அப்பொழுது நாங்கள் அங்கு நின்று, அந்தப் புற்றுநோய் அந்தப் பெண்மணியை விட்டுச் செல்வதைக் கவனித்தோம். நாங்கள் அங்கு நின்று, எங்களுடைய சொந்த கண்களினால் அந்தப் புற்றுநோய் அந்தப் பெண்மணியை விட்டுச் செல்வதைக் கவனித்தோம். எனவே அவள் சகோதரன் உட்ஸ் அவர்களுடைய மனைவியை தொலைபேசியில் கூப்பிட்டு, அவள் வாயிலிருந்து அந்த எச்சிலை உண்மையாகவே கறுப்பு நிறமாக துப்பிக்கொண்டிருப்பதாகக் கூறினாளாம். இப்பொழுதோ அவள் இங்கே இந்தக் காலையில் தன்னுடைய அன்புக்குரிய கணவனோடு அங்கே சபையில் பின்னால் அமர்ந்து கொண்டு, கர்த்தருக்குள் ஒரு அற்புதமான நேரத்தை அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறாள். அவர் அற்புதமானவராயிருக்கவில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 4 எனக்குத் தெரியவில்லை…அதாவது இங்கே வழக்கமாக சுற்றிலும் காணப்படுகிற ஜனங்களிடையே மிக அபூர்வமானதாகவே தரிசனங்கள் நிகழ்கின்றன. இது என்னுடைய வீடாய் உள்ளது. நான் சபையையே பொருட்படுத்திக் கூறுகிறேன். 5 ஞாயிற்று கிழமை, ஒரு வாரம், நாங்கள்…சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மனிதனை இங்கே எத்தனை பேர் பார்த்தீர்கள்? குருடனாயும், முடமானவனாயும், புத்தி சரியில்லாமல் செயலற்றுப் போனவனாயும், மனநிலைக் கோளாறு ஏற்பட்டு, மேயோ மருத்துவர்களால் கைவிடப்பட்டிருந்தான். என்னுடைய கத்தோலிக்க வைத்திய நண்பர் ஒருவர் அவனை இங்கே அனுப்பி வைத்திருந்தார். அப்பொழுது நான் ஆராதனைக்கு வருவதற்கு முன்னரே, கர்த்தர் அந்த மனிதனைக் குறித்த ஒரு தரிசனத்தை அளித்தார். நீங்கள் எல்லோருமே அதை அறிவீர்கள். அந்த மனிதன் அங்கே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் மூலம் குணமாக்கப்பட்டான். பார்த்தீர்களா? அதன்பின்னர் அவனால் உங்களைப் போன்றும், என்னைப் போன்றும் பார்க்க முடிந்தபடியினால், அவன் எழுந்து, தன்னுடைய சக்கர நாற்காலியை எடுத்துக் கொண்டு வெளியே நடந்து சென்றான். அவன் சாதரணமாக தன்னுடைய சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு கட்டிடத்தை விட்டு நடந்து சென்றான். கட்டுப்படுத்தக் கூடிய நரம்பானது…உங்களால் உங்களை சரியாக செயல்படுத்திக்கொள்ள முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள், பாருங்கள், உங்களால் அவ்வாறு செய்யமுடியாது, அவனுக்கு அநேக வருடங்களாகவே அவ்வாறிந்து வந்தது. 6 நேற்றைய தினம் நான் அங்கு சென்றபோது, “புற்று நோயினால்” பீடிக்கப்பட்டிருந்த ஒரு பெண்மணி, நான் உள்ளே சரியாக இரண்டு மணிக்கு வருவதைக் குறித்தும், அதன்பின்னர் “கர்த்தர் உரைக்கிறதாவது என்று கூறினபோது, ‘அவள் சுகமடைந்து விட்டதாகவும்’” சொப்பனங்கண்டிருந்தாள். அப்பொழுது அவள் விழித்தெழுந்தபோது, மணி சரியாக இரண்டாய் இருந்தது. அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் இறங்கி வந்து, கர்த்தரே அவள் கண்டிருந்த அந்த—அந்த சொப்பனத்திற்கு வியாக்கியானம் அளித்தார். நாங்கள் அங்கே கவனித்துக் கொண்டிருந்தபோது, அவள் சரியாக அந்த இடத்திலே சுகமாக்கப்பட்டாள். எவ்வளவு அற்புதமாயுள்ளது! 7 அவருடைய பெயரை எனக்கு நினைவிற்கு கொண்டுவர முடியவில்லை. அது என்ன? சகோதரியே உங்களுடைய பெயர் என்ன? வால்டன், சகோதரி வால்டன், அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். சகோதரி, வால்டன் நீங்கள் சற்று எழும்பி நிற்பீர்களா? நீங்கள் எப்படி உணருகின்றீர்கள் என்று நான் உங்களிடத்தில் கேட்க விரும்புகிறேன். [சகோதரி வால்டன், “அது அற்புதமாயுள்ளது” என்கிறாள்.—ஆசி.] ஆமென். அது நன்றாகவும், அருமையாயும், சிறந்ததாயுமுள்ளது. அந்த விதமான முறையில் அவர் நம்மை ஆசீர்வதிக்க மிகவும் நல்லவராக இருக்கிறார். ஆகையால் நாம் தேவனுடைய மகத்தான செயல்முறையைக் குறித்து மிக அதிகமாகவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 8 ஒரு மருத்துவர் இதை அவளுக்கு கூறாமல் மறைத்துக் கொண்டிருந்தார். அவள் ஒரு பக்கத்திலிருந்து மாத்திரமே சுவாசித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவர் அவளிடத்தில் கூறினார். அது என்னவாயிருந்ததென்றால், புற்று நோயானாது நுரையீரலின் பக்கத்திலே வளர்ந்து அந்த சுவாதத்தை தடுத்துக் கொண்டிருந்தது, நீங்கள் பாருங்கள். உங்களால் ஊடுகதிர் நிழற்படத்தினூடாக புற்று நோயைக் காண முடியாது, ஏனென்றால் புற்றுநோய் ஒரு உயிரணுவாயுள்ளது, அதில் உயிர் உள்ளது. நீங்கள்…நீங்கள்—நீங்கள் ஊடுகதிர் நிழற்படத்தினூடாக புற்றுநோயை உற்று நோக்குவீர்களேயானால், உங்களால் அதைக் காண முடியாது. 9 ஆனால் கர்த்தர் உண்மையாகவே…நாங்கள் அங்கு நின்று எங்களுடைய சொந்தக் கண்களினால் அதைக் கவனித்துப் பார்த்தோம். அது நகர்ந்து, அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதை எங்களுடைய சொந்த கண்களினால் கண்டோம். ஆகையால் நாம் அதற்காக தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 10 இப்பொழுது, இந்த வாரம் நாங்கள் புறப்பட்டுச் செல்லுகையில், எங்களுக்காக ஜெபியுங்கள். சகோதரன் நெவில் புதன்கிழமை இரவு ஆராதனையில் அநேகமாக நான் பிரசங்கித்து விட்டு விட்ட இடத்திலிருந்து பேசுவார். எனவே இந்த மகத்தான தொடர் சங்கிலியான வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்திலிருந்து பேசப்படுகிறதைக் கேட்க இப்பொழுது தவறவிடாதீர்கள். 11 அதிகமாக ஜெபம் ஏறெடுக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன், தேவன் ஜெபத்திற்கு செவிகொடுக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் இந்தக் காலையில் இந்த புத்தகத்தை வாசிப்பதற்கு முன்பாக ஒரு சிறு ஜெபத்தை ஏறெடுக்க விரும்புகிறோம். இப்பொழுது எந்த நபராலும் இந்த புத்தகத்தை இந்த விதமாக அல்லது அதை இந்தவிதமாகத் திறந்து வாசிக்க முடியும். ஆனால் தேவன் மாத்திரமே புரிந்துகொள்ளும்படியாக மனதைத் திறக்கிறார், ஏனென்றால் அவர் மாத்திரமே அதைச் செய்யக் கூடியவராயிருக்கிறார். ஆகையால் நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 12 இப்பொழுது, பிதாவே, உம்முடைய நேச குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், உம்முடைய ஊழியக்காரர்கள் என்ற முறையில், நீர் எங்கள் மூலமாகப் பேச வேண்டும் என்று மிகுந்த தாழ்மையோடு நாங்கள் எங்களையே சமர்ப்பிக்கும்படிக்கு வருகிறோம். வார்த்தையானது தேவனால் பேசப்படும்படிக்கும், அது ஜனங்களுக்குள் ஆவியானால் கேட்கப்படும்படிக்கும், பேசுகிற உதடுகளையும், கேட்கிற காதுகளையும் விருத்தச்சேதனம் செய்யும். பிதாவே, இதை அருளும். அவர் தாமே எங்களுக்குத் தேவையாயிருக்கிற தேவனுடைய வார்த்தையை எடுத்து, அதை எங்களுக்கு அளித்துதவுவாராக, ஏனென்றால் நாங்கள் இதை அவருடைய நாமத்தில், அவருடைய மகிமைக்காக வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 13 இப்பொழுது, இந்தக் காலை வாசிக்கையில், நாம் ஆய்ந்து படித்துக்கொண்டிருக்கிறோம். நாம் பிரசங்கித்துக் கொண்டிருக்கவில்லை; அப்படியே இந்த எபிரெயப் புத்தகத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். எத்தனைபேர் இதைக் கேட்டு மகிழ்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? ஓ, நாம் ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாயிருந்து கொண்டிருக்கிறோமே! இப்பொழுது வேத வாக்கியத்தை வேதவாக்கியத்தின் பேரில் கூர்ந்து ஆய்ந்துகொண்டிருக்கிறோம். அது…வேண்டும்…முழு வேதமும் ஒன்றாக இணைகிறது. அது பரிசுத்த ஆவியினால் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் பொறுத்தப்படுமானால், அப்பொழுது ஒரு வார்த்தையும் அதனுடைய ஸ்தானத்திற்கு புறம்பாக இருக்காது. 14 இப்பொழுது, மனிதனோ, “வேதம் தனக்குதானே முரண்படுகிறது” என்று கூறியிருக்கிறான். நான் அதைக் காண விரும்புகிறேன். நான் அதைக் காண்பிக்கும்படி இருபத்தைந்து வருடங்களாக கேட்டு வருகிறேன். எவருமே அதை இதுவரை காண்பிக்கவேயில்லை. வேதம் முரண்படுகிறதில்லை. அது முரண்படுமாயின், அது வேதம் அல்ல, மகத்தான, எல்லையற்ற யேகோவா தனக்குத் தானே முரண்படமுடியாது, ஆகையால் எந்த முரண்பாடும் வேதத்தில் கிடையாது. அது ஜனங்களின் தவறான புரிந்துகொள்ளுதல்களாய் உள்ளன. 15 இப்பொழுது நாம் ஒரு சிறு பிண்ணணிக்காக திரும்பிச் செல்வோம். இப்பொழுது எபிரெயப் புத்தகம் பரிசுத்த பவுலினால் எபிரெயர்களுக்கு எழுதப்பட்டது. அவர் ஒன்றை எபேசியர்களுக்கு எழுதினார், அது எபேசுவிலிருந்த ஜனங்களுக்காய், கிறிஸ்தவ சபைக்கானதாயிருந்தது. ஒன்று ரோமாபுரியிலிருந்த ரோமர்களுக்கானதாயிருந்தது, கலாத்தியர்களுக்கு ஒன்றையும், எபிரெயர்களுக்கு ஒன்றையும் எழுதினார். 16 இப்பொழுது, பவுல் துவக்கத்திலேயே ஒரு வேத போதகனாயிருந்ததை நாம் கவனிக்கிறோம். அதைத்தான் நாம் கற்றுக் கொண்டோம். அதாவது அவன் தன்னுடைய நாட்களில் மிகவும் மகத்தான ஆசிரியர்களில் ஒருவரான கமாலியேல் என்ற அந்த ஆசிரியரின் கீழ் அமர்ந்து பயின்றான். அவன் பழைய ஏற்பாட்டை நன்குணர்ந்தவனாயிருந்தான். அவன் அதை நன்கு அறிந்திருந்தான். ஆனால் கிறிஸ்துவினுடைய வழிக்கு துன்பப்படுத்தக் கூடிய ஒரு வழியில் இருப்பவனாக மாறிவிட்டான். அவன் பழைய ஏற்பாட்டின் கீழிருந்த ஆசிரியர்களிடத்தில் பயிற்றுவிக்கப்பட்டிருந்தான். ஆனால் ஆசிரியர்கள் வழக்கமாகவே மாம்சமானவர்களாயிருந்தனர்…நான் எந்தக் காரியத்தையும் தவறாக கூறவில்லை என்று நான் நம்புகிறேன். 17 ஆனால் வழக்கமாக, ஒரு மனிதன் ஒரு போதனையை, வேதப் பள்ளிகளின் முறையைக் கொண்டிருப்பானேயானால், அது வழக்கமாகவே மனிதனால் உண்டாக்கப்பட்டதாயிருக்கும். பாருங்கள், அது ஆவியினால் ஏவப்பட்டதல்ல, ஏனென்றால் அது ஒரு வேதபள்ளி போதனையாக மாறுகிறது. நாம் அதைத்தான் இன்றைக்கு உடையவர்களாயிருக்கிறோம். பிரஸ்பிடேரியன், லூத்தரன், பெந்தேகோஸ்தே, இந்த வேதபாடபள்ளிகள் யாவுமே தங்களுடைய வேத சாஸ்திரத்தை உடையவைகளாயிருக்கின்றன, அவைகள் இதற்குள்ளாக வேதவாக்கியங்களை இணைத்துப் பிணைக்கின்றன. 18 அது பழைய ஏற்பாட்டிலும் அதேவிதமாகவே இருந்தது. ஆனால், பவுல் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு, வார்த்தையின் மூலம் வேதவாக்கியங்களை அறிந்திருந்தான். ஆனால் நீங்கள் பாருங்கள், நீங்கள் எவ்வளவுதான் நன்றாக வேதவாக்கியங்களை அறிந்திருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, ஆனால் ஆவி அவைகளை உயிர்ப்பிக்கவில்லையென்றால், அப்பொழுது எழுத்து கொல்லுகிறது. ஆவியோ ஜீவனை அளிக்கிறது. பாருங்கள், அது உயிர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது ஆவியினால் ஜீவிக்க வேண்டும். ஆவியானது வார்த்தையை கிளர்ச்சியூட்டவில்லையென்றால், அதை உங்களுக்கு ஒரு மெய்மையாக்கவில்லையென்றால், அப்பொழுது அது வெறுமென அறிவாற்றலுள்ள எழுத்தாகவே உள்ளது. அங்குதான் நாம் இன்றைக்கு கிறிஸ்தவர்கள் என்று அறிக்கை செய்வதாகக் கூறுகிற அல்லது வெறுமென கிறிஸ்தவர்கள் என்று கூறுகிற அநேகரை உடையவர்களாயிருக்கிறோம், அது கிறிஸ்துவைக் குறித்த அறிவாற்றல் சார்ந்த கருத்தாயுள்ளது. 19 ஆகையால் நாம் தொடர்ந்து சென்று, “அவன் ஏதோ ஒரு காரியத்தை உணர வேண்டியதாயிருந்தது என்றும், நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டியதாயிருந்தது என்று கூறுவதையும்” பார்க்கப் போகிறோம்.ஓ, நாம் சற்றுக் கழித்து, அவை எல்லாவற்றிற்குள் சென்று பார்க்க உள்ளோம். ஒரு சாரர் சத்தமிட வேண்டுமென்றனர். மெத்தோடிஸ்டுகள் சத்தமிட்டபோது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டோம் என்றனர். பெந்தேகோஸ்தேக்கள் அந்நிய பாஷைகளில் பேசினபோது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டோம் என்றனர். ஓ, அவர்களில் சிலர் குலுங்கி ஆடுவார்கள், வழக்கமாக, குலுங்கி ஆட வேண்டும் என்கிறார்கள். ஆம் பழைய…அவர்கள் மேலும் கீழும் நடந்து, புருஷர் ஒருபக்கமாகவும், ஸ்திரீகள் மற்றொரு பக்கமாகவும் குலுங்கி ஆடுவார்கள். பார்த்தீர்களா? குலுங்கி ஆடுவார்கள். அதன்பின்னர் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வந்து, அவர்களை குலுக்குவாராம். அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்களாம். ஆனால் இவையாவுமே நம்பமுடியாதவைகளாயிருக்கின்றன, அதைக் குறித்த எதுவுமே சத்தியமாயிருக்கவில்லை. 20 தேவன் தம்முடைய வார்தையில் ஜீவிக்கிறார். “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்.” வேறெந்தக் காரியத்தினாலும் அல்ல, நீங்கள் குலுங்கி ஆடுவதனாலோ அல்லது அந்நிய பாஷைகளில் பேசுவதனாலோ அல்லது வேறேன்ன சம்பவித்தாலும் அதனால் அல்ல. அதற்கு இதனோடு எவ்வித சம்மந்தமும் கிடையாது. இயேசு, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. என் வசனத்தைக் கேட்டு, விசுவாசிக்கிறவன் உயிர்ப்பிக்கப்பட்டு நித்திய ஜீவன் உடையவனாயிருக்கிறான்” என்றார். அங்குதான் காரியமே உள்ளது. நீங்கள் செய்கிற சிறு காரியம் எதையும் பொருட்படுத்துகிறதில்லை. 21 இப்பொழுது நான் குலுங்கி ஆடுவதற்கோ அல்லது அந்நிய பாஷையில் பேசுவதற்கோ அல்லது கரங்குலுக்குவதற்கோ, ஓ, அந்த சத்தமிடுதலுக்கோ எதிராக இல்லை. அது சரிதான். அது அருமையானது தான். ஆனால் அதுவோ தன்மைகளாய் மாத்திரமேயுள்ளன. புரிகிறதா? என்னால் ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு ஆப்பிளை தர முடிந்தால், அப்பொழுது நீங்கள் அந்த மரத்தை இன்னமும் உடையவர்களாயிருக்கவில்லை. புரிகிறதா? நீங்கள்…அவை தன்மைகளாய் உள்ளன. 22 பொய்பேசுதல், திருடுதல், மது அருந்துதல், புகைப்பிடித்தல், சூதாடுதல், விபச்சாரம் செய்தல் இவை பாவமல்ல, இவை அவிசுவாசத்தின் தன்மைகளாயிருக்கின்றன. புரிகின்றதா? அதனால் தான் நீங்கள்—நீங்கள்…நீங்கள் ஒரு பாவியாய் இருக்கின்ற காரணத்தல் நீங்கள் அதைச் செய்கிறீர்கள். புரிகிறதா? ஆனால் முதலில் நீங்கள் ஒரு பாவியாயிருக்கிறீர்கள். அதனால் தான் நீங்கள் அதைச் செய்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் விசுவாசிக்கிறதில்லை. நீங்கள் விசுவாசிப்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள் அதைச் செய்யமாட்டீர்கள். அப்பொழுது நீங்கள் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், தயவு, சாந்தம், பொறுமையை உடையவர்களாயிருக்கிறீர்கள். அதுவே பரிசுத்த ஆவியின் கனிகளாகும். புரிகிறதா? 23 ஆகையால் மனிதன் பூர்வ கால வார்த்தையின் பாதையை விட்டு அகன்று சென்ற காரணத்தால், நாம் சிறு காரியங்களை, சிறு உணர்ச்சிவசப்படுதல்களைப் பெற்றுள்ளோம். இது வார்த்தையாயுள்ளது. “விசுவாசம் கேள்வியினாலே வரும்.” 24 ஆகையால் பவுல்…தேவன் பவுலைத் தெரிந்து கொண்டார். மனுஷனோ மத்தியாவைத் தெரிந்தெடுத்தான். அவர்கள் சீட்டுப் போட்டனர், ஆனால் மத்தியாவோ ஒரு காரியத்தையும் ஒருபோதும் செய்யவேயில்லை. அது சபையானது ஒரு தெரிந்துகொள்ளுதலைச் செய்ய, தங்களுடைய கண்காணிகளைத் தெரிந்தெடுக்க, வித்தியாசமான ஸ்தலங்களுக்கு தங்களுடைய பிரசங்கிமார்களை அனுப்ப என்ன ஒரு வல்லமையை உடையதாயிருக்கிறது என்பதையேக் காண்பிக்கிறது. அது பல சமயங்களில் மாம்சபிரகாரமானதாகவே உள்ளது. 25 தேவன் ஒரு மனிதனை எங்கே போகும்படி வழிநடத்துகிறாரோ, அங்கேயே அவன் போகட்டும். எனக்கு அது பிடிக்கும். ஜனங்கள் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், “இங்கே ஒரு அருமையான சபை உள்ளது. இந்த சகோதரன் ஒரு அருமையான சபையைக் கட்டியுள்ளார். எங்களிடத்தில் செல்லமான ஒருவர் உண்டு” என்று கூறி, அவர்கள் அவரை இந்த சபைக்கு அனுப்புவார்கள். அப்பொழுது அவர்கள் தங்களையேக் கொன்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக உணரவில்லை. புரிகிறதா? முதலாவது அந்த மனிதன் அங்கே செல்வானாகில், அவனால் அந்த மனிதனுடைய இடத்தை நிரப்ப முடியாது. அப்பொழுது அவர்கள் யாரோ ஒரு செல்லமானவருக்கு தயை காட்ட முயற்ச்சிக்கும்படிக்கு மாத்திரமே சபையை பலவீனப்படுத்துகிறார்கள். அது எப்பொழுதுமே அந்த விதமாகவே இருந்து வருகிறது. 26 ஆனால் நான் சபைக்குள்ளான தலைமை அதிகாரத்தில் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். ஒவ்வொரு சபையும் அதனுடைய சொந்த தலைமையான அதிகாரத்தை உடையதாயிருந்து, அதனுடைய மேய்ப்பர்களையும், அதனுடைய கண்காணிகளையும், அதற்குரியது என்னவாயிருந்தாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். அப்பொழுது அந்த விதமாகப் பார்த்தால் அங்குள்ள அந்த மனிதனுக்கு மேல் எந்தப் பேராயருமேக் கிடையாது. பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒரு காரியத்தை அந்த சபைக்கு கூற விரும்புகிறபோது, அவர்கள் இதைச் செய்ய முடியுமா அல்லது அதைச் செய்ய முடியுமா என்று எவரைக் குறித்துமே அவர்கள் கேட்க வேண்டியதில்லை. அது தனிப்பட்ட நபர் பரிசுத்த ஆவியோடு தொடர்பு கொள்ளுதலாய் உள்ளது. வேதத்தில் ஒரு உள்ளூர் சபைக்கு ஒரு உள்ளூர் மூப்பரைக் காட்டிலும், பெரியவர் யார் என்பதை வேதாகமத்தைக் கொண்டு எனக்குக் காண்பிப்பீர்களா? அது உண்மை. ஆம் ஐயா, உள்ளூர் சபையின் அதிகார தலைமை உரிமை, ஒவ்வொரு சபையையும் அதனுடைய அதிகாரத் தலைமை உரிமையைக் கொண்டுள்ளது. இப்பொழுது, சகோதரத்துவம், அது அற்புதமாயுள்ளது. எல்லா சபைகளும் ஒரு சகோதரத்துவத்தில் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனாலும் இதுவோ உள்ளூர் சபையின் அதிகார தலைமை உரிமையாயிற்றே! 27 பவுல் ஒரு மகத்தான தலைமை போதகனாய், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவனாயிருந்தபடியால், ஒரு நாள் தமஸ்குவிற்குச் செல்லும் தன்னுடைய பாதையில் இந்த புதிய வழியில் இருந்த ஜனங்களை கைது செய்ய சென்றுகொண்டிருந்தான் என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது அவன் உத்தமமாய் இருந்தான். தேவன் உங்களுடைய உத்தமத்தைக் கொண்டு உங்களை நியாயந்தீர்க்கிறதில்லை. அஞ்ஞானிகளைக் காட்டிலும் அதிக உத்தமுமான ஜனங்களை நான் ஒருபோதும் கண்டதேயில்லை. அவர்களில் அநேகர் ஒரு விக்கிரகத்திற்கு பலி செலுத்த வீணாக தங்களுடைய பிள்ளைகளைக் கூட கொன்று போடுகிறார்கள். அது உத்தமுமாயிருக்கவில்லை. ஒரு மனிதன் தெரியாமல் கார்பாலிக் அமிலத்தை குடித்துவிட்டு, வேறு ஏதோ ஒன்றையே தான் குடித்ததாக உத்தமமாக எண்ணிக்கொள்ளக் கூடும். உத்தமம் உங்களை இரட்சிக்கிறதில்லை. “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” பவுல் ஸ்தேவானைக் கல்லெறிய தன்னுடைய சொந்த அதிகாரத்தில் சாட்சி பகர்ந்த போது, அவன் உத்தமமாயிருந்தான். அநேக வருடங்களுக்குப் பின்னர் பவுல் கூறின மன்னிப்பு எனக்குப்பிடிக்கும், அவன், “நான் சபையை மரணத்திற்கேதுவாய் துன்பப்படுத்தின காரணத்தால் சீஷன் என்று அழைக்கப்படுவதற்கு இல்லை ஒரு அப்போஸ்தலன் என்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல” என்றான். உத்தமத்தோடு கூறினானே!. 28 அவன் தன்னுடைய பாதையில் இருந்தபோது அவனுக்கு ஒரு அனுபவம் உண்டானது. பரிசுத்த ஆவியானவர் ஒரு பெரிய அக்கினி ஸ்தம்பத்தில் வந்து, அவனைக் குருடாக்கினார். இப்பொழுது, அந்த அக்கினி ஸ்தம்பம் கிறிஸ்துவாயிருந்தார் என்று நாம் அதனூடாகச் சென்று அதனை ஆய்ந்து படித்துள்ளோம். வனாந்திரத்தினூடாக இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தின அதே அக்கினி ஸ்தம்பமாய் அவர் இருக்கிறார். கிறிஸ்து தேவனாயிருந்தார், தேவன் கிறிஸ்துவாயிருந்தார். தேவன் மாம்சமாகி கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தில் வாசம் பண்ணினார். “தேவன் கிறிஸ்துவுக்குள்ளிலிருந்து உலகத்தை தமக்கு ஒப்புவாக்கிக்கொண்டு, அவர் யாராயிருந்தார் என்பதை காண்பித்துக் கொண்டிருந்தார். 29 இங்கே இதற்கு முன்பு நாம் வேதத்தில் வாசித்துக் கொண்டிருந்த முந்தின வசனங்களில், “அவர் தேவதூதரிலும் தம்மை சற்று சிறிவராக்கினார். அவர் தேவதூதர்களுக்கு உதவியாகக் கைக்கொடாமல், தேவதூதர்களின் ரூபத்தைத் தெரிந்துகொள்ளாமல், ஒரு மாம்ச ரூபத்தைத் தெரிந்துகொண்டார்.” தேவ தூதர்கள் விழுந்துபோகவில்லை, எனவே அவர்களுக்கு மீட்பு தேவையில்லை. மாம்சமோ, மானிடவர்கமோ விழுந்துபோயிருந்தது. அவர்களுக்கு மீட்பு தேவையாயிருந்தது. ஆகையால் பழைய நியாயப் பிரமாணத்தில், ஒரு மனிதன், ஒரு மீட்பராயிருக்க முதலில் அவன் இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது. கொஞ்சங் காலத்திற்கு முன்னர் நாம் இங்கே அந்த மகத்தான ரூத்தின் புத்தகத்தினூடாக சென்று அதனைக் கண்டறிந்தோம். எப்படி ஆவியாயிருக்கிற தேவன் நம்மோடிருக்க இனத்தாராக்கப்பட்டு, நம்மை மீட்டு, நமக்கு நித்திய ஜீவனை அளிக்க நம்மில் ஒருவரானார். நாம் கிருபையின் மூலமாக அவரைப் போலாகும்படிக்கு அவர் நம்மைப் போலாக வேண்டியதாயிருந்தது. 30 அக்கினி ஸ்தம்பமே இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தினது என்பதை நாம் கண்டறிகிறோம். அது இங்கே பூமியின் மேல் மாம்சமாக்கப்பட்டபோது, ஒரு நாள் நாம் அவர் பேசுவதைக் கேட்டோம், அப்பொழுது அவர் அக்கினி ஸ்தம்பமாயிருந்தார் என்று உரிமை கோரினார். அவர்கள், “நீர் எங்கள் பிதாவாகிய ஆபிரகாமைப் பார்க்கிலும் பெரியவர் என்று நீர் கூறுகிறீரா?” என்று கேட்டனர். 31 அதற்கு அவர், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார். நான் யாராயிருந்தேன்? எரிகிற முட்செடியில் அக்கினி ஸ்தம்பமாயிருந்து, ஒவ்வொரு தலைமுறையினூடாகவும் ஒரு நிரந்தரமான நினைவுச் சின்னமாயிருக்கிறேன். அந்த தலைமுறைக்கு மாத்திரமல்லாமல், இந்த தலைமுறையிலும் அதே அக்கினி ஸ்தம்பமாயிருக்கிறேன். அந்த அக்கினி ஸ்தம்பத்தினுடைய புகைப்படத்தையும் கூட நாம் வைத்துள்ளோம் என்பதற்கும், அவர் மாறாதவராயிருக்கிறார் என்பதற்கும் நாம் இந்தக் காலை நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவர் சாவாமையுள்ளவரும், நித்தியமானவரும், ஸ்தோத்தரிக்கப்பட்டவருமாயிருக்கிறார். அவர் அப்பொழுது செய்த அதேக் காரியங்களையே இப்பொழுதும் செய்கிறார், அது நம்மை எவ்வளவு சந்தோஷமாக உணரச் செய்கிறது. 32 ஆனால் பவுல் இந்த அனுபவத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர்…கர்த்தருடைய தூதன் அக்கினி ஸ்தம்பமாயிருந்தார் என்பதை அறிந்திருந்தான், அதுவே கிறிஸ்துவாயிருந்தது…அவர் உடன்படிக்கையின் தூதனாயிருந்தார், அது கிறிஸ்துவாகும். மோசே எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவின் ஜனங்களோடு வரும் நிந்தையை சுமப்பதையும், கிறிஸ்துவினால் வழிநடத்தப்படுவதையுமே அதிக பாக்கியமென்று எண்ணினான். மோசே அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் இருந்த கிறிஸ்துவையே பின்பற்றினான். 33 அதன்பின்னர் கிறிஸ்து, “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன்” என்றார். அவர் இங்கே பூமியின் மேலிருந்தபோது, “நான் தேவனிடத்திற்கு திரும்பிச் செல்கிறேன்” என்றார். அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்குப் பிறகு பரிந்துபேச மகிமையின் சரீரத்திலே மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே வீற்றிருக்கிறார்; பவுல் அவரை மீண்டும் அக்கினிஸ்தம்பமாகக் கண்டான்; ஒரு ஒளி கிட்டத்தட்ட அவனுடைய கண்களைப் பறித்து, அவனைக் குருடாக்கிற்று. 34 பேதுரு சிறைச் சாலைக்குள் அவர் ஒளியாக உள்ளே வந்து, அவனுக்கு முன்பிருந்த வாசல்களைத் திறக்கக் கண்டு, அவன் வெளியே சென்றான். அவர் அல்பாவாகவும், ஓமேகாவாகவும், ஆதியும், அந்தமுமாயிருந்தார் என்பதையும் நாம் கண்டறிகிறோம். 35 அப்பொழுது அவர் செய்த அதேக் காரியங்களை இன்றைக்கும் அவர் நம்மோடிருந்து செய்துகொண்டு, காணும்படியாக தம்மை நமக்கு வெளிப்படுத்திக்கொண்டும், விஞ்ஞான உலகத்திற்கும் அதைக் காண்பித்துக்கொண்டுமிருக்கிறார். 36 ஓ, பூமியின் மீதுள்ள இந்த மகத்தான அந்தகார மற்றும் குழப்பதின் வேளையிலே நாம் முழு உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியுள்ள ஜனங்களாயிருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம் என்பதை அறிந்து களிகூருகிறோம். எல்லா நேரத்திலுமே ஜனங்கள் எல்லாவிதமான கோட்பாடுகளினாலும், மற்றும் பூமியில் உள்ள காரியங்களினாலும் ஸ்தாபனமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, தேவனோ இன்றைக்கும் இன்னமும், உண்மையான ஜீவனுள்ள தேவன் தம்முடைய வார்த்தையின் மூலமும், தம்முடைய காணக்கூடிய அத்தாட்சியின் மூலமும் அவர் இங்கே நம்மோடு இருக்கிறார் என்பதை நமக்கு காண்பித்து, கிரியை செய்து கொண்டும், அசைவாடிக்கொண்டும், ஜீவிக்கச் செய்துகொண்டும், அவர் எப்பொழுதும் செய்ததுபோன்ற அதேக் காரியத்தையே சரியாகச் செய்து கொண்டுமிருக்கிறார். நாம் இதை உடையவர்களாயிருக்கும்படிக்கு நாம் என்ன ஒரு சிலாக்கியம் பெற்ற ஜனங்களாயிருக்கிறோம். ஆகையால் நாம்…வேதம், 2-ம் அதிகாரத்தில், “நாம் இந்தக் காரியங்களைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் நாம் இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருப்போமானால், தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்?” என்று உரைத்துள்ளது. 37 இப்பொழுது, நாம் கண்டறிவது என்னவெனில், பவுல் அந்த அனுபவத்தை ஏற்றுக்கொள்ளும் முன்பு…இப்பொழுது நாம் இதை பதிய வைத்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது, நீங்கள் எந்தவிதமான அனுபவத்தை உடையவராயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, சபையே, நான் உங்களை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். அது எவ்வளவு நன்றாகக் காணப்பட்டாலும், அது எவ்வளவு உண்மையாகத்தென்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது முதலில் வேதாகமத்தினால் சோதித்தறியப்படவேண்டும். எப்பொழுதும் வார்த்தையில் இருங்கள்! எந்தவிதமான அனுபவத்திற்காகவும் ஒருபோதும் வார்த்தையை விட்டுச் செல்லாதீர்கள். 38 பவுல், அவன் இதை ஏற்றுக்கொள்ளும் முன்னர், அவன் அரேபியாவிற்குச் சென்று, மூன்று வருடங்கள் அங்கே தங்கியிருந்து, இந்த அனுபவத்தை வார்த்தையோடு சோதித்துப் பார்த்தான். அதன்பின்னர் அவன் திரும்பி வந்தபோது, அவன் நிச்சயமுடையவனாயிருந்தான். எனவே எந்தக் காரியமும் அவனை நிலைகுலையச் செய்ய முடியாமற்போயிற்று, ஏனென்றால் அவன் நிலையான வார்த்தையின் மேல் திடமாயிருந்தான். இங்கே அவன் இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டிருந்த, பழைய ஏற்பாட்டில் உரைக்கப்பட்டிருந்த அந்த மகத்தான காரியங்களை இந்த எபிரேயர்களுக்குக் காண்பிக்க இப்பொழுது அணுகிக்கொண்டிருக்கிறான். என்ன ஒரு மகிமை! 39 இப்பொழுது கடந்த ஞாயிற்றுக் கிழமை, அல்லது கடந்த புதன் கிழமை, சகோதரன் நெவில் இங்கே 5-ம் அதிகாரத்தில் உள்ள மிக உயர்வான சில இடங்களைக் எடுத்துக் கூறினார். ஏனென்றால் அது ஒரு அற்புதமான அதிகாரமாயுள்ளது. நாம் பவுல் 4-வது அதிகாரத்தில் ஓய்வு நாளின் பேரில், ஓய்வு நாளை ஆசரிப்பதன் பேரில் மேற்கோள் காட்டினதைக் கடந்த ஞாயிறு கண்டறிந்தோம். ஓய்வு நாளை ஆசரித்தல் என்றால் என்ன என்பதைக் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்கள் என்பதைக் குறித்து நீங்கள் இந்தக் காலை நிச்சயமுடையவர்களாயிருக்கிறீர்களா? நீங்கள் அறிந்திருந்தால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 40 ஓய்வுநாள் என்பது “இளைப்பாறுதலாய்” உள்ளது, அது ஒரு நாள் மூலமாக அல்ல, நியாயப் பிரமாணத்தினால் அல்ல, நம்முடைய இளைப்பாறுதலாயிருக்கிற கிறிஸ்துவுக்குள் நாம் பிரவேசிப்பதன் மூலமேயாகும். அவரே நம்முடைய ஓய்வான இளைப்பாறுதலாய் உள்ளார். நாம் அதைப் பழைய ஏற்பாடு முழுவதினூடாகவும் சென்று பார்த்தால், “கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும்” என்ற அந்த வார்த்தை வரும்போது அந்த நேரம் உண்டாகும் என்பதை அது காண்பித்துள்ளது. எனவே அவர், “இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்” என்று பெந்தேகோஸ்தே நாளில் நாம் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தபோது நிரூபித்தார். 41 நாம், “தேவன் ஏழாம் நாளைக் குறித்து தாவீது சொல்லியிருக்கிறபடி, பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்” என்று கண்டறிகிறோம். “தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.” அதை வனாந்திரத்தில் இஸ்ரவேல் புத்திரருக்கு அளித்தார். “அவர் பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.” அது எந்த நாளாயிருந்தது? வாரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நாளா? “நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்கும் நாளிலே, உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாதிருங்கள்.” அந்த நாளிலே அவர் உங்களுக்கு நித்திய சமாதானத்தை, நித்திய ஓய்வினை அளிக்கும்படிக்கு உள்ளே பிரவேசித்துக் கொண்டிருக்கிறார். 42 அப்படியானால் நீங்கள் பக்தியாக மாறவேண்டும் என்பதற்காக நீங்கள் ஞாயிற்றுக் கிழமை சபைக்குச் செல்லுகிறதில்லை. நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறக்கும்போது, நீங்கள் என்றென்றுமாய் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறீர்கள். அதன்பின்னர் ஓய்வு நாளை ஆசரிப்பதேயில்லை. நீங்கள் தொடர்ச்சியாக என்றென்றைக்குமாக நித்தியமாகவே ஓய்வில் இருக்கிறீர்கள். வேதமோ, “நீங்கள் உங்களுடைய உலகப்பிரகாரமான் கிரியைகளை முடித்து, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட சமாதானத்திற்குள் பிரவேசித்திருக்கிறீர்கள்” என்று கூறுகிறது. 43 இந்த முதல் ஐந்து அதிகாரங்கள் இயேசுவை பிரதான ஆசாரியர் என்ற ஸ்தானத்தில் வைத்து எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றன. 1-ம் அதிகாரம், 1-ம் வசனமோ, “பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்கு திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” என்று உரைக்கிறது. 44 அதன்பின்னர் தொடர்ந்து 5-ம் அதிகாரத்தின் முடிவில், நாம் அவர், “மெல்கிசேதேக்காக, நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுமுடையவராயில்லாமல், தொடர்ந்து என்றைன்றைக்கும் ஒரு ஆசாரியனாய் இருப்பவராக” சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைக் கண்டறிகிறோம். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இந்த மகத்தான மனிதர் யாராயிருந்தார்? நாம் அதை இன்னும் இரண்டுக்கும் மேற்பட்ட அதிகாரங்களில் கண்டு அறிந்துகொள்வோம். அவருடைய முழு ஜீவியத்தைக் குறித்தும், நாம் ஆய்ந்துப்படிக்கப் போகிறோம். “இந்த மகத்தான மனிதர் ஆபிரகாமை சந்தித்திருந்தார், அவருக்கு ஒருபோதும் தகப்பனும், தாயும் இருந்ததில்லை. அவருக்கு ஜீவனின் துவக்கம் என்ற ஒரு நேரமே ஒருபோதும் இருந்தது கிடையாது அல்லது அவருடைய ஜீவனின் முடிவு என்ற ஒரு நேரமே கிடையாது. அவர் ஆபிரகாம் இராஜாக்களை முறியடித்து திரும்பி வருகையில் அவனைச் சந்தித்தார்.” 45 இந்த மகத்தான நபரைக் கவனியுங்கள், அவர் யாராயிருந்திருந்தாலும் இன்னமும் ஜீவனோடிருக்கிறார். அவருக்கு ஜீவனின் முடிவேக் கிடையாது. அது ஆபிரகாம் சந்தித்த கிறிஸ்துவாயிருந்தது. நாம் இன்னும் ஒரு சில நாட்களில் அதைக் குறித்த ஆழ்ந்த ஆய்வுக்குள்ளாகப் போகப் போகிறோம். 46 இப்பொழுது, நாம் 6-வது அதிகாரத்தை துவங்குவதற்கு முன்பு ஒரு சிறு பிண்ணணிக்காக இப்பொழுது இங்கே 5-வது அதிகாரத்திலிருந்து துவங்க விரும்புகிறோம், ஏனென்றால் அது உண்மையாகவே முதன்மையாக கவனிக்க வேண்டிய ஒன்றாய் உள்ளது. கூர்ந்து கவனியுங்கள். நாம் கிட்டத்தட்ட இந்த அதிகாரத்தின் 7-வது வசனத்திலிருந்து துவங்கப் போகிறோம். நாம் ஆறாம் வசனத்திலிருந்து துவங்குவோமாக. அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல் செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு; 47 இப்பொழுது இங்கே நான் இந்த 9-வது வசனத்திற்குச் செல்ல விரும்புகிறேன். கவனியுங்கள். புதன் கிழமை சகோதரன் நெவில் அதை எடுத்துப் பிரசங்கித்தார் என்று நான் யூகிக்கிறேன். ஆனால் நான் அப்பொழுது இங்கே இருக்கமாட்டேன். கவனியுங்கள். தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார். இந்த மெல்கிசேதேக்கைப் பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்… 48 நாம் இதனை அதன்பேரில் அங்கே விட்டுவிடுவோம், ஏனென்றால் நாம் மெல்கிசேதேக்கைப் பற்றி இன்னும் ஒரு சில இரவுகளில் பேசப் போகிறோம். 49 இப்பொழுது நாம் நம்முடைய வழக்கமான ஆய்வின் அடிப்படையில் இதன் பேரில் துவங்கப் போகிறோம். நான் விரும்புவதோ…நான் ஒரு நிமிடம் இந்த வசனத்தினுடைய எஞ்சிய பாகத்தை வாசிக்கவுள்ளேன்,11-வது வசனம். இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப் பண்ணுகிறது அரிதாயிருக்கும். காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். ஓ, பரிசுத்த ஆவியானவர் அது எடுத்து உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் இப்பொழுது பதிய வைப்பார் என்று நான் நம்புகிறேன். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். 50 நீங்கள் பலமான ஆகாரத்தை ஒரு குழந்தைக்கு அளித்தால், நீங்கள் அதைக் கொன்றுவிடுவீர்கள். அந்தக் காரணத்தினால்தான் அநேக ஜனங்கள், “ஆ, நான்—நான் அதை நம்புகிறதில்லை” என்று கூறி நடந்து சென்றுவிடுகிறார்கள். இன்னமும் குழந்தையாயிருக்கிறார்களே! அவர்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர்களால் அந்த சத்தியத்தை கிரகித்துக் கொள்ளமுடியவில்லை. அது—அது அவர்களைக் கொன்றுபோடுகிறது. மகத்தான, வல்லமையான காரியங்களை சபையானது இன்றைக்கு அறிந்துகொள்ள வேண்டும், ஆனால் நீங்கள் அதைப் போதிக்க முடியாது. அவர்கள் அதில் இடறிப்போகிறார்கள். அவர்கள்—அவர்கள்—அவர்கள்—அவர்கள் அதனோடு என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருக்கிறார்கள். 51 பவுல் இந்த எபிரேய குழுவினிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறான்…அதே சமயத்தில் அவன் இப்பொழுது நன்கு கற்றறிந்த வேத பண்டிதர்களிடத்திலும் பேசிக் கொண்டிருக்கிறான். அது கற்றறிவாளர்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை இன்னும் ஒரு—இன்னும் ஒரு சில நிமிடங்களில், நாம் அதை கண்டறிவோம். ஆனால் அந்த ஆழ்ந்த ஆவிக்குரியப் பிரகாரமான இரகசியத்திற்கு, சபையானது இன்னமும் அதற்கு குருடாக்கப்பட்டுள்ளது. எனவே பவுல், “காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்க வேண்டிய நீங்கள் இன்னமும் பாலுண்கிற குழந்தையாயிருக்கிறீர்கள்” என்றான். 52 ஓ, அநேகர் எழும்பி, வெளியே போய், “ஓ, நான் இனிமேல் சபைக்கு போக வேண்டியதில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம், பரிசுத்த ஆவியானவர் வந்துவிட்டபடியால், அவரே போதகராயிருக்கிறார்” என்று கூறுவார்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் அந்த விதமான எண்ணத்தைப் பெற்றுக்கொள்ளும்போது, நீங்கள் தவறாயிருக்கிறீர்கள், பரிசுத்த ஆவியானரே போதகராயிருக்கப் போவதாயிருந்தால், பின்னை ஏன் அவர் சபையில் போதகர்களை ஏற்படுத்தினார்? புரிகிறதா? முதலில் அப்போஸ்தலர்களையும், பின்னர் தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும், சுவிசேஷகர்களையும், மேய்ப்பர்களையும் ஏற்படுத்தியுள்ளார். பரிசுத்த ஆவியானவர் சபையில் போதகர்களை ஏற்படுத்தியுள்ளார். எனவே அவரால் அந்த போதகரின் மூலமாக போதிக்க முடியும். அது—அது வார்த்தையின்படியாயில்லையென்றால், தேவன் அதை உறுதிபடுத்தவில்லையென்றால், அப்பொழுது அது சரியான விதமான போதனையல்ல. அது முழு வேதத்துடனும் ஒத்துப் போக வேண்டும், அது அப்பொழுது இருந்தது போலவே இன்றைக்கும் உயிரோட்டமுள்ளதாயிருக்க வேண்டும். அதுவே அந்த உண்மையான காரியம் வெளிப்படுகின்றதாயுள்ளது. 53 இப்பொழுது கவனியுங்கள். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்ச்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்ச்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். பகுத்தறிதலினால் எது சரியானது, எது தவறானது என்று அறிந்துகொள்ளுதல். 54 இப்பொழுது கவனியுங்கள், நம்முடைய பாடத்தின் பேரில் இப்பொழுது துவங்குவோம். இப்பொழுது இது பெரிய பிண்ணணியாகும், நாம் 1-வது வசனத்திற்குச் செல்வோம். ஆகையால் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு,… அவன் என்னக் கூறிக்கொண்டிருக்கிறான்? இந்த முதல் ஐந்து அதிகாரங்கள் முழுவதும் கிறிஸ்து யாராயிருக்கிறார் என்பதை காண்பிக்கும்படியாகவே அவர் பேரில் கற்பிக்கப்பட்டுள்ளன. இப்பொழுது நாம் அந்த கிறிஸ்துவைப் பற்றிய மூல உபதேச வசனங்களை விட்டுச் சென்றுகொண்டிருக்கிறோம். 55 அவர் என்னவாயிருந்தார் என்று நாம் கண்டறிகிறோம்? அந்த மகத்தான யோகோவா தேவன் மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டார் என்றே நாம் அவரைக் கண்டறிந்தோம். நாம் அவரை ஒரு தீர்க்கதரிசியாக அல்ல, ஆனால் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்ததையேக் கண்டோம். அவர் மாம்சமான யோகோவாவாயிருந்தார். தேவன் மாத்திரமே அந்த இயேசு என்ற சரீரத்தில் வாசம் செய்தார். தேவன் மனிதனுக்குள் வாசம் செய்தல். தேவன் தம்முடைய சொந்த குமாரனின் கன்னிப் பிறப்பின் மூலம், மனிதனின் மூலமாக மனிதனிடத்தில் ஒப்புரவாக்கப்பட்டார். ஆவியான யோகோவா அவருக்குள் வாசம் பண்ணினார். 56 இப்பொழுது எத்தனைபேர் தேவத்துவத்தைக் குறித்தப் போதனையை நினைவில் வைத்திருக்கிறீர்கள்? எப்படி நாம் திரும்பிச் சென்று, பல்வேறுபட்ட எல்லா ஆவிகளையும் கொண்டதைப் போலிருந்த அந்த பெரிய வானவில்லைப் போன்று தேவனைக் கண்டறிந்தோம், அது எப்படி இருந்தது? அதன்பின்னர் லோகாஸ் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது, அது ஆவிக்குரிய சரீரமானது, அது ஒரு மனிதனின் ரூபத்தில் இருந்தது. கன்மலையின் வெடிப்பில் அது கடந்து சென்றதை மோசேக் கண்டான். அதன்பின்னர் அந்த ஆவிக்குரிய சரீரம் முற்றிலுமாக மாம்ச சரீரமான கிறிஸ்துவாக்கப்பட்டது. அவருடைய கிருபையினூடாக நாம் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறோம் என்பதை நாம் எப்படியாய் கண்டறிகிறோம். இப்பொழுது என்றென்றும் என்ற ஆங்கில வார்த்தையானது “ஒரு குறிப்பிட்ட கால அளவு; ஒரு குறிப்பிட்ட நேரத்தையே” குறிக்கிறதாயுள்ளது. அதுவோ வேதத்தில், “சதாகாலமும் என்பதற்கு ஆங்கிலத்தில் என்றென்றும் என்றும், அதன் பின்னர் ஆங்கில இடையிட்டுச் சொல்லிட்டு அதன் பின்னர் மீண்டும் என்றென்றும்” என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் என்றென்றும் என்பதோ “ஒரு நேரத்தை” மாத்திரமே பொருட்படுத்துகிறது. ஆனால் நித்தியம் என்பதோ முடிவில்லாத என்றென்றுமானதாய் உள்ளது. ஒரு துவக்கத்தைக் கொண்டுள்ள எந்தக் காரியத்திற்கும் முடிவு உண்டு, ஆனால் துவக்கமேயில்லாத காரியங்களுக்கு முடிவு என்பதே இல்லை. ஆகையால் தேவனுக்கு துவக்கம் என்பதே இல்லாமலிருந்தது, எனவே அவருக்கு முடிவும் கிடையாது. 57 ஆகையால் மெல்கிசேதேக்கு மகத்தான ஆசாரியர், ஒரு மனிதனைப் போன்றிருந்தாலும், அவருக்கு துவக்கமும் கிடையாது, அவருக்கு முடிவும் கிடையாது. நாம், அந்த ஆவிக்குரிய சரீரத்தினூடாகவே, உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டோம். அந்த ஆவிக்குரிய சரீரம் மாம்சமாக்கப்பட்டு, நமக்கு மத்தியிலே வாசம்பண்ணினது, அப்பொழுது அவருடைய மரணத்தினூடாக நாம் தாமே அவருடைய ஆவியைப் பெற்றுக் கொள்கிறோம். நமக்கு முடிவேக் கிடையாது; அந்த நித்திய ஜீவனைப் பெற்றுள்ள தூதர்களாய் அல்ல, புருஷர்களும் ஸ்திரீகளுமாயிருக்கிறோம். ஓ, நான்…எப்படியாவது, என்னுடைய கூட்டத்தினரை ஏதோ ஒரு வழியில் அதைப் புரிந்துகொள்ளும்படிக்கு செய்ய முடிந்தால் நலமாயிருக்கும். நீங்கள் ஒருபோதும் ஒரு தூதனாயிருக்கமாட்டீர்கள். தேவன் தூதர்களை உண்டாக்கினார், ஆனால் தேவன் மனிதனையும் உண்டாக்கினார். தேவன் என்ன செய்கிறாரோ, அது தேவனுடையதாயிருக்கிறது, அது தேவனைப் போன்று நித்தியமானதாயிருக்கிறது. மனிதன் அவருடைய சிருஷ்டிகரைப் போலவே, நித்தியமானவனாயிருக்கிறான், ஏனென்றால் அவன் நித்தியத்திலிருந்து உண்டாக்கப்பட்டான். 58 ஆனால் பாவத்திற்கு முடிவு உண்டு, வேதனைக்கு முடிவு உண்டு. ஆகையால் அங்கே நித்திய நரகம் என்பது இருக்க முடியாது. அக்கினியும் கந்தகமும் கொண்ட ஒரு நரகம் ஒன்று உண்டு என்று நாம் அறிவோம், ஆனால் நித்திய நரகமே கிடையாது. ஒரே ஒரு மாதிரியான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு. அது தேவனுக்கு சொந்தமானதாய் உள்ளது. எனவே நீங்கள் என்றென்றைக்குமாய் பாடுபட வேண்டுமென்றால், அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். நரகத்திற்கு ஒரு முடிவு உண்டு. அது கோடிக்கணக்கான வருடங்களைக் கொண்டதாயிருக்கலாம், ஆனாலும் அதற்கு முடிவிலே ஒரு முடிவு உண்டாகும். 59 வேதம் எங்குமே அவர்கள் நித்தியமாக வேதனைப்பட்டனர் என்று கூறவில்லை, “சதாகாலங்கள்” என்றே கூறியுள்ளது. யோனாவும் கூட மீனின் வயிற்றில் “என்றென்றுமாய்” இருந்தான் என்று எண்ணினான். என்றென்றும் என்பது ஒரு கால நீடிப்பு அல்லது ஒரு குறிப்பிடப்பட்ட நேரமாயுள்ளது. ஆனால் நித்தியம் என்பது நிரந்தரமானதாயுள்ளது, அதற்கு துவக்கமோ அல்லது முடிவோ கிடையாது. அது ஒரு வளையம் போன்ற ஒரு வட்டமாயுள்ளது. நம்முடைய நேரம் வரும்போது, நாம் அந்த மகத்தான தேவனுடைய நோக்கங்கள் சுற்றி சுழன்று வருகிறதற்குள்ளான சுழற்ச்சியில் மாத்திரமே இருக்கிறோம். 60 தேவனுடைய நோக்கம் மனிதனை தம்முடைய சாயலில் உண்டாக்கி, அவரோடு ஐக்கியங்கொள்ளும்படி செய்வதாகவேயிருந்தது. அவர் அவனை ஒரு தெளிவாகத் தெரியக் கூடிய உருவமாக உண்டாக்கினார். இப்பொழுது பாவமானது நம்மை அழிவான ஒரு ஸ்தலத்திற்குள்ளாக நம்மைக் கொண்டுவந்துவிட்டது. ஆனால் அது ஒருபோதும் தேவனுடைய திட்டத்தை தடுத்து நிறுத்துகிறதில்லை. இன்றைக்கு பாவியான நண்பனே, நீ மீண்டும் தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கவில்லையென்றால், உனக்கு எங்கோ ஒரு முடிவு உண்டு. உன்னுடைய முடிவு குழப்பத்திலும், அழிவிலும், வேதனையிலும் மற்றும் துன்பத்திலுமே உள்ளது. ஆனால் நீ கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசங்கொண்டிருப்பாயானால், அவரையே உன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருப்பாயானால், அப்பொழுது தேவன் நித்தியமாயிருப்பது போலவே அதுவும் நித்தியமாயுள்ளது. உனக்கு முடிவேக் கிடையாது, “நான் அவர்களுக்கு நித்திய ஸோயீயை, தேவனுடைய சொந்த ஜீவனைக் கொடுக்கிறேன், அவர்கள் ஒருபோதும் அழிந்துபோகாமல் அல்லது நியாயத்தீர்ப்புக்குள் கூட வராமல், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள்.” அந்தவிதமாகத்தான் அவர் இருந்தார். அதற்காகவே அந்தவிதமாக அவர் வந்தார். 61 இப்பொழுது, இயேசு தம்முடைய ஆசாரியத்துவத்தைக் குறித்த தம்முடைய வருகையில் ஒரு இரக்கத்தினிமித்தமான காட்சிக்காக வரவில்லை. அநேக ஜனங்கள் அந்த விதமாக அதைப் போதிக்கிறார்கள், அதாவது அவர் வந்து, “நான் ஒருக்கால் பாடுபட்டால், நான் ஒரு—ஒரு—ஒரு பரிதாபமான காட்சியாய் இருப்பேன், ஜனங்கள் நிச்சயமாக என்னிடத்திற்கு வருவார்கள்” என்று கூறுவார் என்கிறார்கள். அது தவறானதாகும். அதற்கான வேதவாக்கியமே கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு நபரும் இரட்சிக்கப்பட வேண்டும், தேவன் அவர்களை உலகம் உருவாகுவதற்கு முன்னமே அறிந்திருந்தார். வேதம் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளது. “ஒருவரும் கெட்டுப் போகக் கூடாது என்று தேவன் சித்தமுடையவராயிருக்கிறார்.” அவர்கள் எல்லோரும் மனந்திரும்பி வரவேண்டுமென்று விரும்புகிறார். ஆனால் அவர் தேவனாயிருக்கிறபடியால், முன்னறிதலின் மூலமாக அவர் அதை அறிந்துள்ளார். 62 ரோமர் 8-ம் அதிகாரத்தில் பாருங்கள். பவுல் தேவனுடைய தெரிந்துகொள்ளுதலைப் பற்றி ஆதரித்துக் கூறியது, அதாவது “ஏசாவும் யாக்கோபும், அவர்கள் குழந்தைகளாய் பிறப்பதற்கு முன்னமே, தேவன் அவர்களை அறிந்திருந்தார் என்றும், அவர் ஏசாவை வெறுத்து, யாக்கோபை சிநேகித்தார் என்றும் அவர் கூறினார். அவர்கள் பிறவாததற்கு முன்னமே, அவர்கள் தங்களுடைய நன்றியை வெளிப்படுத்த ஒரு தருணம் உண்டாயிருந்ததற்கு முன்னமே அவர்களை அறிந்திருந்தார், ஏனென்றால் அவர் தேவனாயிருந்தார். அவருக்குத் தெரியும்…அவர் முடிவற்றவராயிருக்கிறார். அவர் முடிவற்றவராயிருக்கின்றபடியால், அவர் ஒவ்வொரு உண்ணியையும், பறக்கிற ஒவ்வொன்றையும், ஒவ்வொரு ஈயையும், பூமியின் மேலிருக்கும் ஒவ்வொன்றையும் அறிந்திருந்தார். அவர் அதை அறிந்திருந்தார். அவர் எல்லையற்றவராய், நித்தியமானவராய், அழிவில்லாதவராய், ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனாய், சர்வ வல்லமை படைத்தவராய், சர்வ வியாபியாய், சகலமும் அறிந்தவராயிருக்கிறார். அவருக்குத் தெரியாத காரியம் ஒன்றுமே கிடையாது. அந்தக் காரணத்தினால் தான் முடிவு என்னவாயிருக்கும் என்பதையும் அவரால் சொல்ல முடியும். அவர் துவக்கத்திலிருந்து முடிவு மட்டும் அறிந்துள்ளார். 63 தீர்க்கதரிசிக்குரிய தீர்க்கதரிசனமுரைத்தல் என்னவென்றால், அது அவருடைய அறிவாய் உள்ளது. அவர் தலைமை வழக்கறிஞராய் இருக்கிறார். அவர், அவரே…அவரே நியாதிபதியாயிருக்கிறார். அவர் தம்முடைய ஞானத்தைக் குறித்த சிலவற்றை வழக்கறிஞரிடத்தில் பேசுகிறார். என்னவாயிருக்கப்போகிறது என்பதை அவர் அறிந்துள்ள காரணத்தால், அவரால் அதை முன்கூட்டியே கூறிட முடியும், அதுதான் தீர்க்கதரிசனமாயுள்ளது. இப்பொழுது நாம் சேவிக்கிற தேவன் இருக்கிறார். அது ஒரு சரித்திரப்பிரகாரமான தேவனல்ல, புத்தர்கள் மற்றும் முகமதியர்களைப் போன்றவர்களுக்கு உள்ள தேவனைப் போன்றல்ல. ஆனால் சர்வ வியாபியான தேவன் ஒருவர் இப்பொழுது இங்கே இந்தக் காலையில், இந்தக் கூடாரத்தில் இப்பொழுது இருக்கிறார்: மகத்தான யேகோவா, நான் இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர், பாவமாம்ச சாயலை தரித்துக்கொள்ளும்படி தம்மை தாழ்மையில் உருவாக்கிக் கொண்டார். இதோ அவர் இருக்கிறார். அவர்தான் உங்களை மீட்டார். அது வேறுயாராகவும், வேறு எங்கும் இருக்க முடியாது, வேறு யாருமே எந்த நேரத்திலும் அதைச் செய்ய முடியாது. 64 தேவன் அங்கே மூன்று பேரை உடையவராயிருந்து, அவர்களில் ஒருவரான தம்முடைய குமாரனை அவர் அனுப்பவில்லை. அது தேவன் தாமே ஒரு குமாரனின் ரூபத்தில் வந்ததாயிருந்தது. ஒரு குமாரனுக்கு ஒரு துவக்கம் உண்டு, குமாரன் ஒரு துவக்கத்தை உடையவராயிருந்தார். அதாவது அருமையான கத்தோலிக்க ஜனங்களே, நம்முடைய விசுவாசத்தின் உண்மைகள் என்ற உங்களுடைய புத்தகத்தை நான் வைத்துள்ளேன். அந்தப் புத்தகத்தில், “தேவனுடைய நித்திய குமாரத்துவம்” என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் எப்படி அந்த வார்த்தையை வெளிப்படுத்திக் கூற போகிறீர்கள்? நீங்கள் எப்படி ஞானமாய் எடுத்துக் கூறப்போகிறீர்கள்? அது எப்படி நித்தியமாய் இருக்க முடியும்? அது வேதத்தில் இல்லை. அது “நித்திய குமாரத்துவம்” என்பதாய் உங்களுடைய புத்தகத்தில் உள்ளது. அவர்கள்…அந்த வார்த்தை சரியல்ல. ஏனென்றால் ஒரு குமாரன் என்ற எந்த காரியத்திற்கும் ஒரு துவக்கம் உண்டாயிருந்தது, நித்தியத்திற்கு துவக்கமேயில்லை, ஆகையால் அது நித்திய குமாரத்துவமல்ல. கிறிஸ்து மாம்சமாகி நமக்கு மத்தியிலே வாசம்பண்ணினார். அவர் ஒரு துவக்கதை உடையவராயிருந்தார். அது நித்திய குமாரத்துவமாயிருக்கவில்லை. அது நித்திய தேவத்துவமாய் இருக்கிறதேயன்றி குமாரத்துவமாய் அல்ல. இப்பொழுது அவர் நம்மை மீட்க வந்தார், அவர் நம்மை மீட்டார். 65 இப்பொழுது, பவுல், அங்கே கூறுகிறதை நீங்கள் கடந்த பாடங்களினூடாக புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், நாம் கொஞ்ச நேரம் அதற்கு மீண்டும் சென்று, அதை வசனத்திற்கு வசனம் பார்ப்போம், இப்பொழுது. ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு,…பூரணராகும்படி கடந்து போவோமாக. 66 அது அவர்களை இடறச் செய்கிறது. அது இடறச் செய்கிறதல்லவா? நாம் என்ன செய்வோம்? …அஸ்திபாரத்தை மற்படியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. 67 இதை கவனியுங்கள். நாம், “பரிபூரணம்” என்ற இந்த வார்த்தையை புரிந்துகொள்வோமாக. தேவனுடைய பிரசன்னத்தில் நீங்கள் நிற்பதற்கு ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு என்பதை நீங்கள் அறிவீர்களா? அது தான் பரிபூரணமாயுள்ளது. தேவனால் பரிசுத்தமில்லாத காரியங்களைச் பொறுத்துக் கொள்ள முடியாது. 68 சபைப் பிரமாணங்களை உடையவர்களே, உங்களைப் பூரணப்படுத்துகிற எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் உடையவர்களாயில்லாதிருக்கும்போது, நீங்கள் எப்படி உங்களை பரிபூரணப்படுத்திக் கொள்ள முடியும்? நீங்கள் பாவத்தில் பிறந்தீர்கள். உங்களுடைய கருத்தரித்தலே பாவத்தில் இருந்தது. இங்கே உங்களுடைய வாஞ்சையே பாவமாயிருந்தது. “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்பேசுகிறவர்களாய் உலகத்திற்கு வந்தீர்கள்.” இப்பொழுது எங்கே நிற்கப்போகிறீர்கள்? 69 அதாவது, “நான் புகைப்பிடிப்பதை விட்டுவிடுவேன். நான் பரலோகத்திற்கு செல்வேன்” என்று கூறின பாவியான நீங்கள் எங்கே நிற்பீர்கள்? வெதுவெதுப்பான, வழுவழுப்பான, கிறிஸ்தவர் என்று அழைத்துக் கொண்டு, ஒரு துக்க முகத்தோடு இங்கிருந்து போய், “நான் சபையைச் சார்ந்தவன்” என்று கூறுகிற நீங்கள் எங்கே நிற்பீர்கள்? நீங்கள் பாவியாயிருக்கிறீர்கள். அது உண்மை. நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்தாலொழிய, மற்றப்படி நீங்கள் இழக்கப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அது உண்மையே. 70 நீங்கள் எப்படி பரலோகம் போகப் போகிறீர்கள்? நீங்களோ, “நான் வாழ்க்கையில் ஒருபோதும் பொய் பேசினதேயில்லை. ஓ, அந்த ஆசைக்குரிய சிறு நபர். துவக்கத்தில் ஒரு தூதனைப் போன்றிருந்தார்” என்று கூறலாம். அது ஒரு பொய். நீங்கள் எவ்வளவு நல்லவராயிருந்தாலும் எனக்கு கவலையில்லை, நீங்கள் ஒரு பாவியாய் இருக்கிறீர்கள். உங்களிடத்தில் எந்த ஒரு காரியமும் கிடையாது. உங்களை எந்த கத்தோலிக்க குருவும் இரட்சிக்க முடியாது, எந்த பேராயரும் இரட்சிக்க முடியாது, போப்பாண்டவருக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள திருத்தந்தையும் இரட்சிக்க முடியாது, எந்த போப்பாண்டவரும் இரட்சிக்க முடியாது, வேறெந்த காரியமும் உங்களை இரட்சிக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் இருக்கிற அதே நிலைமையில்தான் அவரும் இருக்கிறார். நாம் இன்னும் ஒரு சில நிமிடங்களில் அதைப் புரிந்துகொள்வோம். நீங்கள் இருக்கிற அதே நிலைமையில்தான் போப்பாண்டவரும் இருந்தார். ரோமாபுரியின் போப்பாண்டவர் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவராய் உலகத்திற்கு வந்தார். ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் கொண்ட பாலீட்டுபாட்டின் வாஞ்சையினால் பிறந்தார். நீங்கள் அதிலிருந்து எங்கே நீதியைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? 71 “அதுபோல போப்பாண்டவருடைய அப்பாவும், அம்மாவும் அதேவிதமாகவே பிறந்திருந்தனர், அவர்கள் பிறந்தவிதமாகவே அவருடைய தாத்தாவும், பாட்டியும் பிறந்திருந்திருந்தனர்.” எனவே துவக்கமே பாவமாயுள்ளதே! 72 ஆகையால் இது பரிசுத்தம், அது பரிசுத்தம் என்று யார் கூற முடியும்? பரிசுத்தமான ஒரே ஒரு காரியம்தான் உண்டு, அது பரிபூரணராக்கப்பட்ட ஜீவனுள்ள தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாகும். நம்முடைய தேவை பூரண சற்குணராயிருக்க வேண்டும் என்பதாயுள்ளது. இப்பொழுது நாம் எப்படி அவ்வாறு இருக்கப் போகிறோம்? நீங்களாகவே அதை முயற்ச்சியுங்கள். “நான் ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக பிறந்தேன், இப்பொழுது இந்த உலகத்தைவிட்டு போய்க்கொண்டிருக்கிறேன்” என்ற நற்பண்புகளின் பேரில் நான் பரலோகம் செல்ல முயற்ச்சிப்பதற்கு வெறுக்கிறேன். அவ்வாறு செய்தாலும் நான் இழக்கப்படுவேன். நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு போதும் பொல்லாத காரியத்தையே நோக்கிப்பாராமலிருந்திருந்தாலும், பொல்லத எந்தக் காரியத்தையும் அல்லது எந்தக் காரியத்தையுமே ஒருபோதும் நினைக்காமலிருந்திருந்தாலும், நான் நரகத்தின் சுவர்களில் கருமையான அழுக்கினால் படிந்த மாசு போன்ற ஸ்தானத்திலேயே இருக்கிறேன். நான் ஒரு பாவியாயிருக்கிறேன். 73 கர்மேல் ஸ்தாபன குழுவின் சில சகோதரிகளைப் போல, அல்லது வேறேதோ ஒன்றைப் போல நான் வாழ்க்கை நடத்த முடிந்து, ஒரு அறைக்குள் சென்று தாளிட்டு தரித்திருக்க முடிந்தாலும், உலகத்தையே ஒருபோதும் காணாமல், அங்கேயே தரித்திருந்து, என் ஜீவியம் முழுவதும் ஜெபத்தில் தரித்திருந்து, நன்மை செய்ய முடிந்தாலும், ஒரு கோடீஸ்வரனாக பிறந்து, நான் பெற்றுள்ள எல்லாவற்றையும் ஏழைகளுக்கு அளிக்க முடிந்தாலும், நான் அப்பொழுதும் ஒரு பாவியாக இருந்து, நரகத்திற்குத்தான் செல்வேன். ஆம் ஐயா. 74 நான் லுத்தரன் சபையில், பாப்டிஸ்டு சபையில், பெந்தேகோஸ்தே சபையில், பிரஸ்பிடேரியன் சபையில் சேர்ந்து கொண்டிருக்கலாம், நான் தொட்டிலில் உருண்டது முதல், நூறாண்டு காலம் வரை அந்த சபையில் உண்மையுள்ளவனாக வாழ்ந்து, பின்னர் என்னுடைய ஜீவியம் எடுக்கப்பட்டவுடன் எந்த மனிதனும் தன்னுடைய விரலை என்னை நோக்கிச் சுட்டிக்காட்டி, “அவர் எப்போதுமே எந்த தீய எண்ணமுமில்லாதவராய் இருந்தார்” என்று கூற முடிந்தாலும், நான் நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக நான் நரகத்திற்கே செல்வேன். 75 நான் ஒரு பாவியாயிருக்கிறேன். அதுதான் உண்மை. என்னிடத்தில் ஒன்றுமில்லை. எந்த காரியத்தையும் செலுத்தும்படிக்கு நான் கண்டடையக் கூடிய வழி எதுவுமேக் கிடையாது. தேவனுக்கு மரணம் தேவைப்பட்டது. நான் என்னுடைய சொந்த ஜீவனை அளித்தால், நான் என்னுடைய ஜீவனை அளித்தால், அப்பொழுது என்னால் எப்படி மனந்திரும்ப முடியும்? காரணம், உங்களுடைய…கடனானது முதலில் செலுத்தப்படவேண்டும். தேவன் மாத்திரமே தன்னுடைய ஜீவனை அளித்து, அதை மீண்டும் எடுத்துக்கொள்ளக் கூடியவராய் இருந்தார். ஆகையால் அவரால் பாவமாகி, தன்னுடைய ஜீவனை அளித்து, அதை மீண்டும் எடுத்துக் கொள்ள முடிந்தது, அதை, “நீதி” என்று அழைக்க முடிந்தது, கடனோ செலுத்தப்பட்டுவிட்டது. கடன் செலுத்தப்பட்ட நிலையிலே நீங்கள் இருக்கிறீர்கள். 76 இப்பொழுது நாம் மத்தேயு 8-ம் அதிகாரத்திற்கு திருப்புவோம், அது 7-வது இல்லை 8-வது அதிகாரத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். சரி. அது மத்தேயு 5-வது அதிகாரத்தில் உள்ளது. இயேசு பிரசங்கிக்கிறார், மலைப்பிரசங்கத்தில் பிரசங்கிக்கும் 47-வது வசனம். உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா?(கவனியுங்கள்) …நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (என்ன?) ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். அது இயேசுவின் கட்டளையாயிருந்தது, “நீங்களும் அவ்வண்ணமாயிருங்கள்.” 77 அவர்கள், “எவருமே பூரண சற்குணராயிருக்க முடியாது,” என்று கூறுகிறார்கள். வேதம், ‘எவருமே பூரண சற்குணராயில்லை’ என்று கூறியுள்ளது, “அங்குதான் உங்களுடைய முரண்பாடு உள்ளது.” அப்படித்தானே? சரி. 78 நீங்கள் உங்களுக்குள் பூரண சற்குணராயிருக்க முடியாது. நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதில் நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தால், நீங்கள் இழக்கப்படுவீர்கள். “ஆகையால் தேவன் பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.” இப்பொழுது: ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். 79 “ஆகையால்…” இப்பொழுது எபிரெயர் 5-வது, 6-வது அதிகாரம். ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு,…பூரணராகும்படி கடந்து போவோமாக. 80 இப்பொழுது, பிரான்ஹாம் கூடாரத்தில் உள்ள நீங்கள், ஓ, “நாம் சுகமளித்தல்களை உடையவர்களாயிருக்கிறோம்” என்பதை நான் அறிவேன். அது அற்புதம். “நாம் தரிசனங்களை உடையவர்களாயிருக்கிறோம்.” ஓ, அது—அது அருமையாயுள்ளது. நீங்கள் ஆவிக்குரிய சொப்பனங்களை உடையவர்களாயிருக்கிறீர்கள், சில நேரங்களில் அவைகள் ஆவிக்குரிய சொப்பனங்களாயிருப்பதில்லை. சில நேரங்களில் நீங்கள்… “நாம் ஏழைகளுக்கு உதவ முயற்ச்சிக்கிறோம். நம்மால் முடிந்ததை நாம் செய்கிறோம்.” ஓ, அது சரிதான். ஆனால் நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பது அதுவல்ல. நாம் மற்றொரு கட்டத்திற்குள்ளாக பிரவேசித்துக்கொண்டிருக்கிறோம். …உபதேச வசனங்களை…விட்டு… 81 “ஓ, ஆம், நாம் கிறிஸ்துவின் உபதேசத்தைப் பெற்றுள்ளோம். அவர் கன்னியின் மூலம் பிறந்த தேவ குமாரன் என்று நாம் விசுவாசிக்கிறோம். நாம் இந்த எல்லாக் காரியங்களையும் விசுவாசிக்கிறோம்.” அது அற்புதமானதாயுள்ளது. 82 ஆனால், “மூல உபதேச வசங்களை விட்டு, பூரணராகும்படி கடந்துபோவோமாக.” ஓ, என்னே! நீங்கள் இதைப் புரிந்துகொள்ளும்படியான ஒரு நிலைக்குக் கொண்டுவந்து இதை விளக்க நான் இப்பொழுது பிரதான தூதனுடைய சத்தத்தை உடையவனாயிருந்தால் நலமாயிருக்கும். இப்பொழுது பவுல், “கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு” என்று கூறுகிறான், எல்லா வேதபண்டிதர்களும், நாம் அறிந்துள்ள எல்லா வேத சாஸ்திரங்களும், இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையைப் பற்றிய யாவையுமே, அதாவது தேவன் எப்படி மாம்சமானார் என்பது மற்றும் இந்த மற்றக் காரியங்கள் யாவையுமே விட்டுவிட வேண்டும். 83 இன்னும் ஒரு சில நிமிடங்களில் பவுல் அவையாவையுமே இங்கு தொடர்ந்து சென்று விளக்குவதைக் காணலாம். எனவே நாம் அதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு, நாம் அதைச் சற்று வாசிப்போமாக. …செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல்,… இப்பொழுது, நாம் அதை விசுவாசிக்கிறோம், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்,… நாம் அதை விசுவாசிக்கிறோம். ஸ்நானங்களுக்குகடுத்த உபதேசம். நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும், நாம் அதை விசுவாசிக்கிறோம். …கைகளை வைக்குதல், நாம் கைகளை வைக்குதலில் விசுவாசங்கொண்டுள்ளோம். நாம் விசுவாசங்கொண்டிருக்கவில்லையா? பாருங்கள், அவை யாவும் நிச்சயம் தேவைதான். …மரித்தோரின் உயிர்த்தெழுதல்… 84 நாம் அதை விசுவாசிக்கிறோம். இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் இங்கே, “நியாயத்தீர்ப்பு” என்பதைப் பார்க்கிறீர்கள், அதில் “நித்தியம்” என்ற வார்த்தையே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பொருள் என்றென்றைக்கும் என்பதாயுள்ளது. நியாயத்தீர்ப்பு தேவனால் உரைக்கப்படுகின்றபோது, அது என்றென்றுமானதாயுள்ளது. ஆகையால் நியாயத்தீர்ப்பு கூறப்பட்ட பிறகு, எந்த விதமான ஒப்புரவாகுதலுமே இருக்க முடியாது. இப்பொழுது தேவன் ஏன் தம்முடைய சொந்த குமாரனை, அதை நாம் அவருடைய சொந்த மருந்து என்று அழைப்பது போல, அவரை எடுத்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அவர் மனிதனை பாவத்திற்காக ஆக்கினைக்குட்படுத்தியபோது, அவரால் ஒப்புரவாக முடிந்த ஒரே வழி, அந்த மனிதனுடைய ஸ்தானத்தை தாமே எடுத்துக்கொள்வதன் மூலமேயாகும். அந்த ஒரே வழியில் மாத்திரமே அவரால் ஒப்புரவாக்கப்பட முடிந்தது அல்லது நம்மை ஒப்புரவாக்க முடிந்தது, எனவே அவர் நம்முடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு, ஒரு பாவியானார். யேகோவா தேவன் ஒரு பாவியானார், அவர் தம்முடைய ஜீவனை அளித்தார். 85 இப்பொழுது, நீங்கள் ஒரு பாவியாக மரிக்கும்படிக்கு உங்களுடைய ஜீவனை அளிக்க முடியும். பவுல், “என் சரீரத்தை ஒரு பலியாக சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும்,…எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை,” என்றான். ஏனென்றால் அது கிரியை செய்யாது. பாருங்கள், நீங்கள் மரிக்கும்போது, நீங்கள் போய்விடுகின்றீர்கள். நீங்கள் ஒரு பாவியாக மரிக்கும்போது, நீங்கள் இழக்கப்படுகின்றீர்கள். 86 “ஆனால் தேவன் மாம்சத்தில் இறங்கி வந்து, பாவத்தை மாம்சத்தில் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பாவ மாம்சமானார்.” ஏனென்றால் அவர் நித்திய தேவனாயிருந்தார், தம்முடைய சொந்த சரீரத்தையே உயிரோடு எழுப்பினார், ஆகையால் அவர் நீதிமானாக்குகிறவராய் இருக்கிறார். 87 இப்பொழுது இந்த காரியங்களிலிருந்தும் “நாம் பூரணராகும்படி கடந்துபோவோமாக” என்று பவுல் கூறினான். இப்பொழுது என்ன? …நித்திய நியாயத்தீர்ப்பு …தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம். (3-வது வசனம்) 88 இப்பொழுது, “பூரணராகும்படி கடந்து போவோமாக.” இயேசு, “ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்றார். நாம் ஒவ்வொருவரும் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் என்ன செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நாம் ஆக்கினைக்குட்படுத்தப்படுகிறோம். நாம் பிறந்தபோதே, ஆக்கினைக்குட்படுத்தப்பட்டோம். உங்களுடைய தாயும், தகப்பனும் பிறந்தபோது, ஆக்கினைக்குட்படுத்தப்பட்டனர். நீங்களும் உங்களுடைய எல்லா முன்னோர்களுமே பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாக்கப்பட்டிருந்தனர். ஆகையால் நீங்கள் அதை எப்படி அடையப்போகிறீர்கள்? நீங்கள் எப்படி பூரண சற்குணராயிருக்கப்போகிறீர்கள்? நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் ஒருபோதும் செய்யாமலிருந்தாலும், ஒருபோதும் திருடாமலிருந்தாலும், பொய்சொல்லாமலிருந்தாலும், உங்களுடைய ஜீவியத்தில் எந்த ஒரு காரியத்தையும் செய்யாமலிருந்தாலும், நீங்கள் இன்னமும் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய முதல் சுவாசத்தை சுவாசிப்பதற்கு முன்னரே நீங்கள் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டீர்கள். நீங்கள் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டீர்கள். அது உண்மையே. நீங்கள் உங்களுடைய முதல் சுவாசத்தை சுவாசிப்பதற்கு முன்னரே நீங்கள் தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் இங்கே பூமியில் உங்களுடைய தகப்பன் மற்றும் தாயின் பாலியல் உறவுமுறை வாஞ்சையினால் கொண்டுவரப்பட்டபடியினால் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட்டீர்கள். தேவன் அதை ஆதியிலேயே ஆக்கினைக்குட்படுத்தினார். நீங்கள் துவக்கத்திலேயே ஆக்கினைக்குட்படுத்தப்பட்டீர்கள். ஆகையால் நீங்களும்…உங்களோடு பூமியின் மேல் உள்ள மற்ற ஒவ்வொரு நபரும் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டனர். இப்பொழுது நீங்கள் பூரண சற்குணமாகுதலை எங்கே பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள்? 89 கவனியுங்கள். நாம் ஒரு நிமிடம் எபிரெயர் 10-ம் அதிகாரத்திற்கு திருப்புவோமாக. கூர்ந்து கவனியுங்கள். நான் 9-வது அதிகாரத்திலிருந்து சற்று வாசிக்க விரும்புகிறேன், முதலில் 11-வது வசனம். கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு,…பெரிதும், உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும், தம்முடைய சொந்த கூடாரம், அவருடைய மாம்ச சரீரம்… 90 பாருங்கள், அந்த பழையக் கூடாரம், நீங்கள் கவனியுங்கள், அந்த பழையக் கூடாரம் அதற்குள் ஒரு திரையய் உடையதாயிருந்தது, அது தேவன் வாசம்செய்த உடன்படிக்கைப் பெட்டியை மறைத்திருந்தது. அதை எத்தனைபேர் அறிவீர்கள்? நிச்சயமாக. அந்த மனிதனால் உண்டாக்கப்பட்ட பழைய கூடாரத்தில் இருந்த சாயந்தீர்ந்த வெள்ளாட்டு தோல்களினால் உண்டாக்கப்பட்டிருந்த திரைகள் தேவனுடைய சமூகத்தை மறைத்திருந்தன. வருடத்திற்கு ஒரு முறை ஒரே ஒரு மனிதன் மாத்திரமே அங்கே உள்ளே பிரவேசிக்க முடியும் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நிச்சயமாக. வருடத்திற்கு ஒரு முறை உள்ளே செல்வதோ ஆரோனாயிருந்தது. அவன் அபிஷேகிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓ, அது தேவையாயிற்றே! அவன் தன்னுடைய கையில் அக்கினியை வைத்திருக்க வேண்டும். அவன் அக்கினியில்லாமல் உள்ளே சென்றால், அவன் அந்தத் திரையின் பின்னே சென்றவுடனே மரித்துவிடுவான். அவன் விழுந்து மரித்துப்போவான். கிறிஸ்து அதை நிறைவேற்றும்படிக்கு வரும் வரைக்கும் அவன் அங்கு உள்ளே சென்று, இந்த குத்துவிளக்குகளை ஏற்றி, பலியாக மரித்த மிருகத்தின் இரத்தத்தை கிருபாசனத்தண்டையிலே தெளிக்க வேண்டியதாயிருந்தது. 91 இப்பொழுது, ஆனால், தேவன் மற்றொரு மாதிரியான ஒரு கூடாரமானார். யார் அந்த கூடாரமாயிருந்தது? இயேசு. இயேசுவின் உட்புறத்தில் தேவன் இருந்தார். அவர் மறைக்கப்பட்டிருந்தார், ஆனால் அவர் உலகத்தை தம்முடைய வெளிப்படுத்துதல்களினாலே தமக்கு ஒப்புரவாக்கிக் கொண்டிருந்தார். கிறிஸ்து தேவனை வெளிப்படுத்தினார். அவர், “கிரியைகளைச் செய்கிறது நானல்ல. அது எனக்குள் வாசமாயிருக்கிற என் பிதாவாகும். நான் தானாக எதையுமே செய்யாமல், பிதாவானவர் செய்கிறதையே நான் காண்கிறேன். எனக்குள்ளிருக்கிற பிதாவானவரே இந்த தரிசனங்களை எனக்குக் காண்பிக்கிறார். அதன்பின்னர் பிதாவானவரே என்னைச் செய்யும்படிக் கூறினதைச் செய்யச் செல்கிறேன்” என்றார். நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? தேவன் ஒரு மானிட சரீரத்தின் உட்புறத்தில் இருந்தார், சாயந்தீர்ந்த வெள்ளாட்டுதோல்களின் பின்னால் அல்ல, ஆனால் அந்த மானிட சரீரமோ ஜீவித்துக்கொண்டும், அசைந்து கொண்டுமிருந்தது. தேவன் கரங்களை உடையவராயிருந்தார்; தேவன் பாதத்தை உடையவராயிருந்தார்; தேவன் நாவை உடையவராயிருந்தார்: தேவன் கண்களை உடையவராயிருந்தார். அது கிறிஸ்துவாயிருந்தது. அப்படித்தான் அவர் இருந்தார். 92 இப்பொழுது, அவர் புறப்பட்டுச் சென்ற பிறகு, அவருடைய மரணத்தினூடாக தம்முடைய சபையை பரிபூரணப்படுத்தி சபையை கீழ்படிதலுக்கு கொண்டுவர ஆவியானவர் அதற்குள் வந்தார். கிறிஸ்துவுக்குள்ளிருந்த அதே ஆவியானவர் சபையில் இருந்து கொண்டு, கிறிஸ்து செய்த அதேக் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார். “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்.” 93 இப்பொழுது இதற்கு செவிகொடுங்கள். கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்மந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும், அவர் கைகளினால் செய்யப்பட்ட கூடாரமாயிருக்கவில்லை. அவர் எப்படிப் பிறந்தார்? கன்னிப் பிறப்பின் மூலம். வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும்…பரிசுத்தமாக்கப்பட்டு இல்லை இந்த சரீரம் பலியிடப்பட்டதினாலே… 94 ஆண் பாலிடத்திலிருந்தே இரத்தம் உண்டாகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் யாரோ ஒருவர், “ஓ, இயேசு ஒரு யூதனாயிருந்தார்” என்றார். அவர் ஒரு யூதனாயிருக்கவில்லை. “ஓ, நாம் யூத இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டோம்” என்றார். இல்லை. நாம் அதனால் இரட்சிக்கப்படவில்லை. நாம் யூத இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருப்போமேயானால், நாம் இன்னமும் இழக்கப்பட்டவர்களாகவே இருக்கிறோம். இயேசு யூதனாயுமிருக்கவில்லை, அவர் புறஜாதியாயுமிருக்கவில்லை. அவர் தேவனாயிருந்தார்; பிதாவாகிய தேவனாய், ஆவியானவராய், காணப்படாத ஒருவராய் இருந்தார். “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.” அவர் தேவனை, தேவன் என்னவாயிருந்தார் என்பதை வெளிப்படுத்தினார். 95 இப்பொழுது அவருடைய சபையானது தேவன் என்னவாயிருக்கிறார் என்பதை காண்பிக்கும்படியாக தேவனை வெளிப்படுத்த வேண்டியதாயுள்ளது. புரிகிறதா? நாம் என்ன செய்கிறோம்? நமக்குள்ளே ஸ்தாபனமாக்கிக்கொண்டு, “நான் அவர்களோடு எந்தக் காரியத்தையும் செய்யமாட்டேன். அவர்கள் மெத்தோடிஸ்டுகளாயிருக்கிறார்கள். அவர்கள் பிரஸ்பிடேரியங்களாயிருக்கிறார்கள். நான் அவர்களோடு எந்தக் காரியத்தையும் செய்ய விரும்புகிறதில்லை. நான் பாப்டிஸ்டு. நான் பெந்தேகோஸ்தே,” என்று கூறுகிறோம். ஹூ! அந்தவிதமான நோக்கங்களை கொண்டிருக்கிற நீங்கள் இழக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். உண்மை. 96 யார் தற்பெருமையாய்ப் பேச முடியும்? யார் எந்தக் காரியத்தையாவது கூற முடியும்? பிரஸ்பிடேரியன்கள் கொண்டு வந்துள்ள அவமானத்தைப் பாருங்கள். பாப்டிஸ்டுகளினுடைய அவமானத்தைப் பாருங்கள். கத்தோலிக்கரின் அவமானத்தைப் பாருங்கள். பெந்தேகோஸ்தேக்கள், நசரேயன்கள், யாத்திரீகப் பரிசுத்தரின் அவமானத்தைப் பாருங்கள். மற்றவர்களையும் நோக்கிப் பாருங்கள். ஆனால் நான் அவர் பெற்ற அவமானத்தை உங்களுக்கு ஒரு கையில் சுட்டிக் காட்டி, சவாலிடுகிறேன். ஆம், சர்வ வல்லமையுள்ள தேவன், “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்” என்று கூறினதை ஒரு விரலில் சுட்டிக் காட்டுகிறேன். அதோ அவர் இருக்கிறார். அவர்தான் அந்த பரிபூரணமான ஒருவர். 97 இப்பொழுது, நாம் இங்கிருந்து சற்று மேற்கொண்டு வாசிப்போம். வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார்.(உங்களுக்கு அது புரிகிறதா?) 98 இன்றைக்கு மீட்கப்படும்படியாய் அல்ல, பின்னர், அடுத்த வாரம் எழுப்புதல் துவங்கும்போது, மீண்டும் மீட்கப்படும்படியல்ல, அதன்பின்னர், ஓ, நாம் பின்வாங்கிப்போய் மீண்டும் மீட்கப்படுவது அல்ல, நீங்கள் என்றென்றைக்குமாய் ஒரே முறை மீட்கப்படுகின்றீர்கள். அது உண்மையே. இனிமேல் மீட்பு, மீட்பு, மீட்பு என்பதே கிடையாது. “நித்திய மீட்பு!” “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, கடந்த காலம், ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” அவன் கரங்குலுக்கியிருக்கிற காரணத்தினாலா? அவன் ஒரு குறிப்பிட்ட வழியில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டப்படியினாலா? அவன் தன்னுடைய கரத்தில் இரத்தத்தைக் கொண்டிருந்த காரணத்தினாலா? “அவன் தேவனுடைய ஒரே பேறான குமாரனை விசுவாசித்திருக்கிற காரணத்தினாலேயாகும்.” அப்படித்தான் நாம் நித்திய மீட்பைப் பெற்றிருக்கிறோம். 99 இப்பொழுது கவனியுங்கள். அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச் சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! 100 “மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” உலகம் என்ன நினைக்கிறது என்று நீ ஏன் கவலைப்படுகிறாய்? உன்னுடைய அயலான் என்ன நினைக்கிறான் என்று நீ ஏன் கவலைப்படுகிறாய்? நம்முடைய மனசாட்சி மரித்திருக்கிறது, உண்மையான ஜீவனுள்ள தேவனைச் சேவிக்க நாம் மறு ஜென்மமாக்கப்பட்டு, தேவனுடைய ஆவியினால் மீண்டும் பிறந்துள்ளோம். அந்நிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். 101 இப்பொழுது கீழே 10-வது வசனம்…சரியாகக் கூறினால் 10-ம் அதிகாரம், அதே பக்கத்தின் வலப்பாகம். இப்படியிருக்க, நியாயப் பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. ப—ரி—பூ—ர—ண—ம், அது “பரிபூரணம்” என்று அங்கு உள்ளது. ஆகையால் கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு…பூரணராகும்படி கடந்து போவோமாக. ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். 102 “நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால்” எல்லா நியமங்களும், ஞானஸ்நானமும், அவர்கள் கொண்டிருந்த எல்லாக் காரியங்களும், “ஆராதனை செய்கிறவர்களை ஒருபோதும் பூரணப்படுத்தக் கூடாதிருந்தது.” அதே சமயத்தில் தேவன் “பரிபூரணத்தைக்” கேட்கிறார். 103 நீங்கள் நசரேயன் சபையில் சேர்ந்தால், அது உங்களை ஒருபோதும் பரிபூரணப்படுத்தாது. நீங்கள் பாப்டிஸ்டு சபையில் சேர்ந்தால், பெந்தேகோஸ்தே, அது என்னவாயிருந்தாலும், அது உங்களை ஒருபோதும் பரிபூரணப்படுத்தாது. நீங்கள் ஒரு நல்லவராக இருக்கிறபடியால், விசுவாசமுள்ள மனிதராயிருக்கிறபடியால், உங்களை அது ஒருபோதும் பரிபூரணப்படுத்தாது. நீங்கள் ஒரு காரியத்தையும் தகுதியாய் கொண்டிருக்க முடியாது. அதற்கு தகுதியாகும்படியாக உங்களைக் குறித்த எந்த ஒரு காரியமும் இல்லை. நீங்கள் இழக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள், “நான் நியாயப் பிரமாணத்தைக் கைக்கொண்டேன். நான் ஓய்வுநாளை அநுசரித்துவருகிறேன். நான் இதை, இந்த எல்லா தேவனுடைய நியமங்களையும் கைக்கொள்கிறேன். நான் இதைச் செய்கிறேன்” என்று கூறலாம். 104 பவுல், “நாம் இப்பொழுது அந்த எல்லாக் காரியங்களையும் ஒரு புறம் தள்ளிவிடுவோமாக” என்றான். 105 “அது சரிதான், ஆனால் நாம் இதைச் செய்வோம். நாம் ஜனங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்போம், நாம் அவர்களுடைய சுகமளித்தல் போன்றவற்றிற்காக அவர்கள் மீது கரங்களை வைப்போம்.” 106 நாம் அந்தக் காரியங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வசனமாக எடுத்துப் பேசக் கூடும். ஞானஸ்நானம், நாம் அதை விசுவாசிக்கிறோம். “ஒரே நம்பிக்கை, ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம் தான் உண்டு.” ஒரே ஒரு ஞானஸ்நானம் தான் உண்டு என்று நாம் விசுவாசிக்கிறோம். மரித்தோரின் உயிர்த்தெழுதலில் நாம் விசுவாசங்கொண்டுள்ளோம். முற்றிலுமாக. இயேசுவானவர் மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று நாம் விசுவாசிக்கிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம். “வியாதியஸ்தர்களுக்காக, கைகளை வைக்குதல்,” அதனால்தான் அது இவ்வாறு கூறப்பட்டது. “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” நாம் அதை விசுவாசிக்கிறோம். ஆனால் அது என்னவாயிருக்கிறது? பவுல், “அவை யாவும் செத்தக் கிரியைகள்” என்றான். அது நீங்கள் செய்கிற ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. 107 “இப்பொழுது நாம் பூரணராகும்படிக்கு கடந்து போவோமாக.” ஓ, என்னே! நாம் கூடாரத்திற்குள்ளாக வந்துகொண்டிருக்கிறோமேயன்றி, அஸ்திபாரத்திற்கு அல்ல; கூடாரம், கூடாரத்திற்குத் தானே. அதுவோ அஸ்திபாரமாய் உள்ளது. நியாயப்பிரமாணம், நீதி, சபையைச் சேர்ந்து கொள்ளுதல், ஞானஸ்நானம் பண்ணப்படுதல், கைகளை வைக்குதல். அவைகள் யாவுமே சபையின் ஒழுங்கு முறைகளாயிருக்கின்றன. “ஆனால் இப்பொழுது நாம் பூரணராகும்படி கடந்து செல்வோமாக.” பரிபூரணப்படுத்தப்பட்டிருக்கிறவர் ஒரே ஒருவர்தான், அவர் இயேசு. 108 நாம் எப்படி அவருக்குள் பிரவேசிக்கிறோம்? “மெத்தோடிஸ்டுகளின் மூலமாகவா?” இல்லை. “பெந்தேகோஸ்தேக்களின் மூலமாகவா?” இல்லை. “பாப்டிஸ்களின் மூலமாகவா?” இல்லை. “வேறு எந்த சபையின் மூலமாகவா?” இல்லையே. “ரோமன் கத்தோலிக்க சபையின் மூலமாகவா?” இல்லையே. 109 நாம் எப்படி அதற்குள்ளாகப் பிரவேசிக்கிறோம்? ரோமர்.8:1. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. அதாவது உலகம் என்ன கூறுகிறது என்பதற்கு எந்தக் கவனமும் செலுத்தாதீர்கள். 110 நீங்கள் சுகவீனமாயிருந்தால், மருத்துவர், “நீங்கள் மரிக்கப் போகிறீர்கள்” என்று கூறினால், நீங்கள் அதற்கு எந்தக் கவனமும் செலுத்த வேண்டாம், அது உங்களுக்கு எந்த ஒரு தொல்லையும் ஏற்படுத்த வேண்டாம். 111 அவர்கள் உங்களிடத்தில், “நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு முன்னர் நீங்கள் ஒரு கத்தோலிக்கராய் மாறவேண்டும், அல்லது ஒரு பிரஸ்பிடேரியனாய் அல்லது இதைச் செய்ய வேண்டும்” என்று கூறினால், நீங்கள் அதற்கு எந்தக் கவனமும் செலுத்த வேண்டாம். “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல், அவர்கள் காண்கிற காரியங்களின்படி நடவாமல், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை.” நீங்கள் உங்களுடைய கண்களினால் காண்கிற ஒவ்வொரு காரியமும் பூமிக்குரியதாயிருக்கிறது. 112 ஆனால் இதுவோ வார்த்தையினூடாக நீங்கள் உங்களுடைய ஆவியில் காண்கிற காரியங்களாய் உள்ளனவே! வார்த்தையானது தேவன் என்னவாயிருக்கிறார் என்றும், நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்றும் பிரதிபலிக்கிறதான தேவன் நோக்கிப் பார்க்கிற கண்ணாடியாய் உள்ளது. அல்லேலூயா! ஓ, என்னே! அதுவே உங்களுக்குக் கூறுகிறது. நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்றும், நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எங்கேப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்றும், உங்களுக்கு கூறுகிறதற்கு இந்த உலகத்தில் ஒரே ஒரு புத்தகம் தான் உள்ளது. அதை உங்களுக்கு கூறக் கூடிய எந்த இலக்கியப் புத்தகத்தின் பக்கத்தையாவது, எல்லா விஞ்ஞானப் புத்தக்கத்திலும் பார்த்து எங்காவது இருந்தால், அல்லது வேறேதாவது இருந்தால், மற்றும் எழுதப்பட்டிருக்கிற வேறெந்த நல்ல புத்தகத்திலாவது இருந்தால் எனக்குக் காண்பியுங்கள், அதைக் கூறக் கூடியது எதுவுமேயில்லையே. இது தேவன் என்னவாயிருக்கிறார் என்றும், நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்றும் காண்பிக்கிற தேவனுடைய நோக்கிப் பார்க்கும் கண்ணாடியாயிருக்கிறது. அதன்பின்னர் நீங்கள் ஒரு தெரிந்துகொள்ளுதலைச் செய்ய விரும்பினால், நீங்கள் என்னவாயிருக்க முடியும் என்று காண்பிக்கிற இரத்தக் கோடு ஒன்று அதற்கிடையே அங்கே உண்டு. அங்குதான் நீங்கள் இருக்கிறீர்கள். 113 “ஒரே ஆவியினால்,” இப்பொழுது, I கொரிந்தியர் 12. நாம் எப்படி அந்த சரீரத்திற்குள்ளாகப் பிரவேசிக்கிறோம்? “கரங்களை குலுக்குவதனாலா?” இல்லை ஐயா. “சபையில் சேர்ந்து கொள்வதனாலா?” இல்லை ஐயா. “பின்பக்கமாக, முன்பக்கமாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறதினாலா? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலா? சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம் என்ற நாமத்தினாலா? நீங்கள் விரும்புகிற வேறெந்த காரியத்தினாலாவதா?” அதற்கு இதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. “தேவனைப் பற்றும் நல்மனச் சாட்சியின் உடன்படிக்கையாயிருக்கிறது.” நாம் இன்னமும் வம்புப் பண்ணுகிறோம், கடுஞ்சினங்கொண்ட குமறலோடும், வாதிட்டுக்கொண்டும், பிரிவினைகளை செய்துகொண்டும், வேறுபாடுகளை உண்டுபண்ணிக்கொண்டுமிருக்கிறோம். அது உண்மையே. “ஆனால் அவையாவும் செத்தக் கிரியைகளாயிருக்கின்றன.” நாம் பரிபூரணத்தண்டைக்கு சென்றுகொண்டிருக்கிறோம். 114 இதுவோ நான் செய்துள்ள காரியங்கள். ஒரு ஊழியக்காரர் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்தார். அவர் உங்களை முன்பக்கமாகவோ, பின்பக்கமாகவோ அல்லது மூன்று முறையோ, நான்கு முறையோ அல்லது ஒரு முறையோ ஞானஸ்நானம் கொடுத்திருந்தால் அல்லது அவர் அதை எப்படி செய்திருந்தாலும், அதற்கு இதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. நீங்கள் எப்படியும் அந்த சபைக்கு நிரூபிக்கும்படியாக அந்த சபையின் ஐக்கியத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் மரணம், அடக்கம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறீர்கள். வியாதியஸ்தரை சுகப்படுத்தும்படியாக கைகளை வைக்குதல், அது அற்புதம் தான். ஆனால் அவையாவும் மாம்சபிரகாரமானதாயுள்ளது, நீங்கள் ஜீவித்துக்கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அந்த சரீரமானது மீண்டும் மரித்துப் போய்விடும். அது மீண்டும் மரித்துப்போகும். “இப்பொழுது நாம் இந்த எல்லாக் காரியங்களையும் ஒரு பக்கமாய் தள்ளிவைத்து விட்டு, பூரணராகும்படிக்கு கடந்து போவோமாக.” 115 நாம் எப்படி பரிபூரணமடைகிறோம்? அதைத்தான் நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம். …கிறிஸ்து பரிபூரணப்படுத்தியிருக்கிறார்… “தேவனோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” அந்த சரீரத்திற்குள்ளாக நாம் பிரவேசிக்க விரும்புகிறோம். அதுதான் சரீரமாய் உள்ளது. ஏன்? நீங்கள் அந்த சரீரத்திற்குள் இருந்தால், நீங்கள் ஒருபோதும் நியாயத்தீர்ப்பைக் காணவேமாட்டீர்கள், நீங்கள் ஒருபோதும் மரணத்தை ருசிப்பார்ப்பதில்லை. நீங்கள் அந்த சரீரத்தில் இருக்கும்போது, நீங்கள் மரணத்திலிருந்தும், நியாயத்தீர்ப்பிலிருந்தும், பாவத்திலிருந்தும், மற்ற ஒவ்வொரு காரியத்திலிருந்தும் விடுதலையாயிருக்கிறீர்கள். 116 “பிரசங்கியாரே, நீங்கள் எப்படி அதற்குள் பிரவேசிக்கிறீர்கள்? இந்தக் கூடாரத்தில் சேர்ந்துகொள்வதன் மூலமாகவா?” அப்படி சேர்ந்தாலும் அதே சமயத்தில் நீங்கள் இழக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். எப்படியும் உங்களால் சேர முடியாது; நாம் எந்த புத்தகத்தையும் வைத்திருக்கவில்லை. “நாம் எப்படி அதற்குள் பிரவேசிக்கிறோம்? ஏதோ ஒரு சபையை சேர்ந்துகொள்வதன் மூலமாகவா?” இல்லை ஐயா. “நாம் எப்படி அதற்குள் பிரவேசிக்கிறோம்? நீங்கள் அதற்குள் பிறக்கின்றீர்கள். 117 I கொரிந்தியர் 12. …எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு… 118 நாம் அந்த சரீரத்திற்குள்ளாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, பாவத்திற்கு விடுதலையாயிருக்கிறோம். தேவன் உங்களை இனி ஒருபோதும் காண்கிறதில்லை; அவர் கிறிஸ்துவை மாத்திரமேக் காண்கிறார். நீங்கள் அந்த சரீரத்திற்குள்ளாக இருக்கும்போது, தேவன் அந்த சரீரத்தை நியாயந்தீர்க்க முடியாது. அவர் அதை ஏற்கெனவே நியாயந்தீர்த்துவிட்டார். அவர் நம்முடைய நியாயத்தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டு, நம்மை உள்ளே அழைத்துக்கொண்டார். விசுவாசத்தினாலே, கிருபையினூடாக, நாம் நம்முடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டு நாம் நடக்கிறோம். பரிசுத்த ஆவியே நம்மை அவரோடுள்ள இந்த ஐக்கியத்திற்குள் நம்மைக் கொண்டுவருகிறது. “நாம் இனி ஒருபோதும் உலகத்தின் காரியங்களின்படி நடவாமல், ஆவியில் நடக்கிறோம்.” வார்த்தை நம்மண்டை வந்து உயிர்ப்பித்தது. அவர் என்னுடைய ஸ்தானத்தில் மரித்தார். நான் உயிர்பிக்கப்பட்டேன். இதோ ஒரு காலத்தில் பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்திருந்த நான் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய வாஞ்சைகள் யாவும் அவரை சேவிப்பதேயாகும். என்னுடைய அன்பு யாவும் அவருக்கேயாகும். என்னுடைய நடைகள் யாவும் அவருடைய நாமத்தில் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன், அதாவது நான் எங்கே போனாலும், நான் என்ன செய்தாலும், நான் அவரையே மகிமைப்படுத்துவேன். நான் வேட்டையாடிக்கொண்டிருந்தாலும், நான் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும், நான் பந்து விளையாடிக் கொண்டிருந்தாலும், நான்…என்ன செய்து கொண்டிருந்தாலும், “கிறிஸ்து எனக்குள் இருக்கிறார்” என்ற அப்படிப்பட்ட ஒரு ஜீவியம் எனக்கு இருக்க வேண்டும், அது மனுஷர்களை அந்த விதமாய் இருக்க வேண்டும் என்ற வாஞ்சையை உண்டுபண்ணும்; அப்பொழுது உங்களுடைய சபையைப் பற்றிய வம்பளத்தல், புறங்கூறுதல், அலட்டுதல் போன்றவையே இருக்காது. உங்களுக்கு அது புரிகின்றதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] “ஒரே ஆவியானால் நாம் அந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்படுகிறோம்.” “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களை கடந்துபோவேன்.” 119 கவனியுங்கள். நாம் தயவுகூர்ந்து இங்கே இன்னும் சற்று மேற்கொண்டு வாசிப்போமாக. …அவைகளை செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. 10-ம் அதிகாரம் 2-வது வசனம். பூரணப்படுத்துமானால்,…அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? 120 அது அந்த நபரை பூரணப்படுத்தக் கூடுமானால்…தேவன் பரிபூரணத்தைக் கேட்கிறார். நியாயப்பிரமாணங்களை கைக்கொள்வதனால், எல்லா கட்டளைகளையும் கைக்கொள்வதனால், அது உங்களைப் பரிபூரணப்படுத்துமானால், அப்பொழுது வேறெந்தக் காரியமும் வேண்டியதில்லையே; அப்படியானால் நீங்கள் ஏற்கெனவே பரிபூரணமாக்கப்பட்டிருக்கிறீர்களே. காரணம், நீங்கள் பரிபூரணமாயிருக்கும்போது, நீங்கள் நித்தியமாயிருக்கிறீர்கள். காரணம் தேவன் ஒருவர் மாத்திரமே நித்தியமானவராயிருக்கிறார், தேவன் ஒருவர் மாத்திரமே பரிபூரணராயிருக்கிறார். நீங்கள் நித்தியமாயிருக்கக் கூடிய ஒரே வழி தேவனுடைய பாகமாவதேயாகும். [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] …ஒரு தரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதனால்… என்ன? “ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனசாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதனால்…” நீங்கள் அதைக் குறித்த மொழிபெயர்ப்பை எழுதிக் கொள்வீர்களேயானால், அது “வாஞ்சை” என்பதாகும். …ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்ற வாஞ்சையே இல்லாதிருக்குமானால்… …ஆராதனை செய்கிறவர்கள் ஒரு தரம் சுத்தமாக்கப்பட்டப் பின்பு… 121 நீங்களோ எழுந்து போய், “ஓ, அல்லேலூயா, நான் கடந்த இரவு இரட்சிக்கப்பட்டேன். ஆனால் நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம், அவள் என்னை பின்வாங்கிப்போகச் செய்துவிட்டாள். அல்லேலூயா, என்றோ ஒரு நாள் நான் மீண்டும் இரட்சிக்கப்படுவேன்,” என்று கூறலாம். நீ பரிதாபமான பயிற்றுவிக்கப்படாத கல்வியறிவற்றவன். அது அந்தவிதமான வழியில் இல்லை. 122 “ஆராதனை செய்கிறவர்கள் ஒரு தரம் சுத்தமாக்கப்பட்ட பின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதனால்” என்று வேதம் கூறியுள்ளது. நாம் தொடர்ந்து வாசிக்கையில் அப்படியே ஒரு நிமிடம் கவனியுங்கள். அப்படி நிறுத்தபடாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவு கூருதல் உண்டாயிருக்கிறது. 123 இப்பொழுது நாம் நேரத்தை மிச்சப்படுத்த கீழே 8-வது வசனத்திற்கு செல்லப் போகிறோம், அங்குதான் நான் படிக்க விருக்கிறேன். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக் குறித்து மேற்சொல்லியபடி பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: 124 9-வது வசனம் தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். 125 நாம் அதன்பேரில் தரித்திருக்க நேரமிருந்தால் நலமாயிருக்கும். நீங்கள் ஒரு பிரஸ்பிடேரியனாய், அல்லது ஒரு பெந்தேகோஸ்தேவாய், அல்லது பாப்டிஸ்டாய், அல்லது மெத்தோடிஸ்டாய் இருக்கும் வரையில், அவரால் உங்களோடு எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. பாருங்கள், அவர் இரண்டாவதை நிலைநிறுத்தும்படியாக முதலாவதை அவர் நீக்கிப் போட வேண்டியதாயிருக்கிறது. நீங்கள், “நான் ஒரு மெத்தோடிஸ்டு” என்று கூறும்வரையில், ஆஹா, மெத்தோடிஸ்டிகளுக்கு எதிராகவோ அல்லது பாப்டிஸ்டுகளுக்கு எதிராகவோ அல்லது பெந்தேகோஸ்தேவிற்கு எதிராகவோ ஒன்றுமில்லை. ஆனால் சகோதரனே, அது—அது இதனை பொருட்படுத்துகிறதில்லை. நீங்கள் பூரணமாகுதலண்டைக்குச் செல்ல வேண்டும், அது கிறிஸ்துவுக்குள்ளாகும். 126 இப்பொழுது இதை அப்படியே ஒரு நிமிடம் கவனியுங்கள். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். 127 ஹூ? நாம் இன்னும் கொஞ்சம் மேற்கொண்டு வாசித்து, அதை நிறுத்திக்கொள்வோம். நாம் வாசித்துக்கொண்டிருக்கையில், அது நம் மனதில் பதியட்டும், “ஒரேதரம்.” அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்தி வருகிறவனாயும் நிற்பான். இவரோ… நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? நீங்கள் இப்பொழுது உங்களுடைய மனசாட்சியைத் திறந்து, அதை தட்டிக்கழிக்காமல், அதை இருதயத்திற்குள் நேராக செல்லவிடுவீர்களா? “ஆனால் இந்த மனிதன்.” எந்த மனிதன்? ரோமாபுரியின் போப் அல்ல, மெதோடிஸ்டு சபையின் பேராயரல்ல, அல்லது வேறெந்த சபையின் பேராயருமல்ல. இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். கவனியுங்கள். இதோ இங்கு உண்டாகிறது. ஏனெனில்…ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூ-ர-ண-ப்-ப-டு-த்-தி-யி-ரு-க்-கிறார், இவர் பூரணப்படுத்தியிருக்கிறார்… “அடுத்த எழுப்புதல் வரையிலுமா?” அது என்னக் கூறினது? …பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். உங்களுக்கு இது புரிகிறதா? “நாம் பூரணராகும்படி கடந்து போவோமாக.” 128 இப்பொழுது பரிசுத்தம் என்ற ஸ்தாபன குழுவின் ஜனங்களாகிய நீங்கள், “ஓ, ஆம், நாங்கள் பரிசுத்தத்தில் விசுவாசங்கொண்டுள்ளோம். அல்லேலூயா! நாங்கள் பரிசுத்தமாகுதலில் விசுவாசங்கொண்டுள்ளோம்.” ஆனால் நீங்கள் உங்களுடைய சொந்தக் காரியத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இதை விட்டு விட்டீர்கள், அதை விட்டுவிட்டீர்கள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் அதைச் செய்யக் கூடாது என்பதை நீங்களே அறிவீர்கள். கிறிஸ்து இருதயத்தின் வாசலைத் திறந்து அதை உங்களுடைய இருதயத்தில் உயிர்ப்பித்தால், அப்பொழுது நீங்கள் பாவம் மரித்துள்ள ஒரு ஸ்தலமாக மாறி, அதன் வாஞ்சையாவும் போய்விட்டவர்களாகிவிடுகிறீர்கள். அப்பொழுது அவர் உங்களுடைய சொந்த சுய நீதியை எடுத்துப்போடுகிறார், அவர் தம்மைத்தாமே உங்களுக்குள் ஸ்தாபிப்பார். “அது தேவகுமாரனாகிய கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதாயுள்ளது.” …நாம் பூரணராகும்படி கடந்து போவோமாக. 129 நாம் எப்படி பூரணராயிருக்க முடியும்? கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாகவே. சபையை சேர்ந்துகொள்வதன் மூலமாய் அல்ல. நாம் என்ன செய்கிறோம் என்ற நம்முடைய நல்ல கிரியைகளினூடாக அல்ல. அதெல்லாம் சரிதான். நாம் இந்த விதமாக அல்லது அந்த விதமாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருக்கிறோம் என்ற காரணத்தினால் அல்ல. கைகளை வைக்குதலின் மூலம் நாம் சுகமடைந்துள்ளோம் என்ற காரணத்தினால் அல்ல. “நாம் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலில் விசுவாசங்கொண்டுள்ளோம்” என்ற இந்த மற்றெந்த காரியங்களின் நிமித்தமாகவும் அல்ல. 130 பவுல், “என்னால் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேச முடிந்தாலும்,” அந்த இரண்டு பாஷைகளும் புரிந்து கொள்ளப்படுகின்றன, அப்படி அவை புரிந்து கொள்ளப்பட முடியவில்லையென்றால், அவை வியாக்கியானிக்கப்பட வேண்டும், “அப்படியிருந்தாலும் நான் ஒன்றுமில்லை. நான் அறிவையும், தேவனுடைய ஞானம் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் வரத்தை உடையவனாயிருந்தாலும்,” வேதாகமத்தை எடுத்து விளக்கி…அதை ஒன்றாக இணைத்துக் காட்ட முடிந்தாலும், “நான் ஒன்றுமில்லை.” அப்படியானால் வேதத்தைக் கற்றறிய வேதபாட சாலைக்கு செல்வது எந்தவிதமான அதிக நன்மையையும் செய்கிறதில்லையல்லவா? “நான் மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும்,…” அப்படியானால் சுகமளிக்கும் கூட்டங்களும் மிக அதிகமாக பிரயோஜனமுள்ளதென்று பொருள்படுகிறதில்லை, அது அவ்வாறு பொருள்படுகிறதா? “நான் ஒன்றுமில்லை, நான் என்னுடைய சரீரத்தை ஒரு பலியாக சுட்டெரிக்கப்படக் கொடுத்தாலும், நான் ஒன்றுமில்லை.” 131 அவர்களோ, “ஓ”, “அந்த மனிதன் பக்தியுள்ளவன்” என்று கூறுகிறார்கள். 132 பவுல், “ஆனாலும் அவன் ஒன்றுமில்லை” என்றும், “ஒருபோதும் ஒன்றுமில்லாதவனாய் போகிறான்” என்றான். 133 “அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துபோம்; தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் தவறிப்போம்; இந்த மற்றெல்லாக் காரியங்களும் தவறிப்போம். ஆனால் நிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்துபோம்.” பாருங்கள், அந்த “நிறைவானது” நிறைவானது என்றால் என்ன? அன்பு, அன்பு என்றால் என்ன? தேவன். “நாம் இந்த எல்லா செத்த கிரியைகளையும், சடங்கினையும் தள்ளி விட்டு, பூரணராகும்படி கடந்து போவோமாக.” உங்களுக்கு இது புரிகிறதா? நாம் கிறிஸ்துவினூடாக பூரணப்படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் எப்படி அதற்குள் பிரவேசிக்கிறோம்? பரிசுத ஆவியின் அபிஷேகத்தினாலேயாகும். 134 “சரி, என்ன சம்பவிக்கிறது?” நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள். 135 “நான் கரங்குலுக்கலாமா, குதிக்கலாமா, இதை செய்யலாமா? நீங்கள், நீங்கள் எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டாம். நீங்கள் அதை ஏற்கெனவே செய்துள்ளீர்கள்; தேவன் உங்களை மரணத்திலிருந்து ஜீவனுக்கு கொண்டு வந்துவிட்டார், நீங்கள் ஜீவனோடிருக்கிறீர்கள். அப்படியானால் உங்களுடைய ஜீவியத்தின் கனிகள் அதைக் காண்பிக்கின்றன. 136 ஏராளமான மெத்தோடிஸ்டுகளும், நசரேயன்களுமாகிய நீங்கள் உங்களால் சத்தமிட முடிந்தளவு சத்தமிட்டும், ஒரு மனிதனுடைய சிறு நிலத்திலிருந்து தானியத்தைத் களவாடிவிடுகிறீர்கள், அது உண்மையே. மேலும் செய்ய முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறீர்கள். 137 ஏராளமான பெந்தேகோஸ்துக்களாகிய நீங்கள் ஒரு காய்ந்த பசுமாட்டின் தோலின் மீது பட்டாணிகளைக் கொட்டுவதுபோல, நிச்சயமாகவே அந்நிய பாஷையில் பேசிவிட்டு, பின்னர் உடனே வெளியே போய், அடுத்த மனிதனுடைய மனைவியோடு சுற்றித் திரிந்து, எல்லாவிதமான காரியங்களையும் செய்து வருகிறீர்கள். சகோதரனே, அதுவல்ல அது. 138 எந்த உணர்ச்சிவசப்படுதலையும் உடையவர்களாயிருக்க முயற்ச்சிக்காதீர்கள் அல்லது பரிசுத்த ஆவியின் ஸ்தானத்தை வேறெந்த காரியமும் எடுத்துக்கொள்ள முயற்ச்சிக்காதீர்கள். புதிய பிறப்பு உண்டாகும்போது, நீங்கள் மாற்றமடைகின்றீர்கள். நீங்கள் அதை நிரூபிக்க எந்தக் காரியத்தையும் உடையவர்களாயிருக்க வேண்டியதில்லை. நீங்கள் நடக்கும்போது, உங்களுடைய ஜீவியமே அதை நிரூபிக்கிறது. நீங்கள் அன்பு, சமாதானம், நீடிய பொறுமை, தயவு, சாந்தம், பொறுமையையுடையவர்களாயிருக்கிறீர்கள். அந்தவிதமாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள், எனவே முழு உலகமும் இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பை உங்களுக்குள் காண்கிறது. 139 இப்பொழுது அந்நிய பாஷைகளில் பேசுதல், அங்கே சத்தமிடுதல், அது இந்த விதமான ஒரு ஜீவியத்தைப் பின்தொடருகிற தன்மைகளாகும். நீங்கள் அந்தத் தன்மைகளை எடுத்து, போலியாக பாவனை செய்ய முடியும், ஆனால் அதில் ஒருபோதும் ஜீவன் இருக்காது. நாம் அதைக் காண்கிறோம். அது உண்மையென்று எத்தனை பேர் அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நிச்சயமாகவே, உங்களுக்குத் தெரியும். நிச்சயமாகவே, நிச்சயமாகவே நீங்கள் அறிவீர்கள். என்னே! அவை யாவும் உங்களைச் சுற்றிலுமிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். 140 ஆகையால் நீங்கள் ஜீவிக்கிற ஜீவியத்தைத் தவிர வேறெந்த காரியத்தையுமே பரிசுத்த ஆவியின் அத்தாட்சி என்று உங்களால் கூற முடியாது. இப்பொழுது நீங்கள் அந்நிய பாஷையில் பேச விரும்பினால், நீங்கள் ஜீவிக்கிற ஜீவியம் அதற்கு ஆதரவாக இருந்தால், அப்பொழுது அது முற்றிலும் சரியே. அது உண்மை. நீங்கள் சத்தமிட வேண்டுமென்று விரும்பினால், அருமையானதுதான், அது நல்லதுதான். நானும் கூட சில நேரங்களில் என்னுடைய ஒரு ஜோடு காலணிகளைக் கூட அணியமுடியாத அளவிற்கு மிகவும் சந்தோஷமடைந்து மிகவும் சத்தமிடுகிறேன். நான் அவைகளை வைத்துக்கொண்டு குதிக்க விரும்புகிறேன். அது அற்புதமானது தான். நான் அதை நம்புகிறேன். 141 நான் தரிசனங்களையும், வியாதியஸ்தர் சுகமடைவதையும், மரித்தோர் உயிரோடெழுப்பட்டதையும் கண்டிருக்கிறேன். அவர்கள் அங்கே கிடத்தப்பட்டிருக்க, மருத்துவர்கள் நடந்து சென்று, “அவர்கள் முடிவுற்றுப்போய், மரித்துவிட்டனர்” என்று கூறும்போது, அவர்களோ ஒரு சில மணிநேரங்கள் அங்கே கிடத்தப்பட்டிருக்க, பரிசுத்த ஆவியானவர் அங்கே இறங்கி வந்து ஒரு தரிசனத்தை காண்பித்து, அங்கே போய் அந்த நபரை எழுந்திருக்கச் செய்கிறார். நான் செவிடாயிருக்கிறவர்களையும், ஊமையரையும், குருடரையும், முடமானவர் எழுந்து நடப்பதையும் கண்டிருக்கிறேன். அது…அது வெறும் தன்மைகளாயிருக்கின்றன். 142 சகோதரனே, நீண்ட காலத்திற்கு முன்பே, உலகமானது அதனுடைய அஸ்திபாரத்தை உடையதாயிருந்தற்கு முன்னமே, தேவன் தம்முடைய நித்திய கிருபையினூடாக, அவர் கீழ்நோக்கிப் பார்த்து, அவர் முன்னறிவினால் உங்களையும் என்னையும் கண்டார். நாம் எந்தக் காலத்தில் ஜீவிப்போம் என்பதை அவர் அறிந்திருந்தார். நாம் என்னவாயிருப்போம் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகையால் தெரிந்துகொள்ளுதலினால், அவர் நாம் அவரோடு கறையற்றவர்களாயிருக்கும்படி உலகத் தோற்றத்திற்கு முன்னே நம்மைத் தெரிந்துகொண்டார். 143 இப்பொழுது, நாம் அவருக்குள் கறையற்றவர்களாயிருக்கும்படிக்கு உலகத்தோற்றத்திற்கு முன்னே அவர் நம்மை தெரிந்துகொண்டிருப்பாரேயானால், நாம் யாவரும் கறையுள்ளவர்களாகவே பிறந்துள்ளோம், வேறோன்றுமே செய்ய முடியாது…வேறெந்தக் காரியமும் நம்மை சுத்திகரிக்க முடியாது, எனவே நாம் எப்படி கறைதிரையற்றவர்களாய் இருக்கப்போகிறோம்? “அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் ஜீவனின் முடிவையுடையவனாயிராமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு அனுப்பினார், அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவான்.” ஆகையால் நாம் அவரண்டை வரும்போது, விசுவாசத்தினால் கிருபையைக் கொண்டு, பரிசுத்த ஆவியானவர் நம்மை அழைப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். 144 இந்த பூமியின் மேல் ஒரு சரீரம் இருப்பதற்கு முன்னமே, உங்களுடைய சரீரங்கள் இங்கே கிடந்தன. அது சுண்ணாம்பு, சாம்பல் உப்பு, ஈரம், இயல் உலக ஒளி, தாது எண்ணெய் போன்ற பதினாறு மூலக்கூறுகளால் உண்டாக்கப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவர் பூமியின் மேல் நயந்து இனிமையாய் அசைவாடத் துவங்கினார். அவர் அசைவாடினபோது உண்டான முதல் காரியம் என்னவென்றால் ஒரு சிறு ஈஸ்டர் மலர் தோன்றினது. அதன்பின்னர் அவர் புற்களையும், சில பறவைகளையும் தோன்றப் பண்ணினார், சற்று கழித்து ஒரு மனிதன் தோன்றினான். 145 இப்பொழுது, அவர் ஒருபோதும் ஒரு ஸ்திரீயை பூமியின் மண்ணிலிருந்து உண்டாக்கவேயில்லை. அவள் ஏற்கெனவே துவக்கத்திலேயே ஒரு மனிதனுக்குள் இருந்தான்; மனுஷனும் ஸ்திரீயும் ஒன்றாயிருந்தனர். ஆகையால் அவர் ஆதாமின் பக்கவாட்டிலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, ஒரு ஸ்திரீயை அவனுக்கு துணையாக உண்டுபண்ணினார். அப்பொழுது பாவமானது உள்ளே வந்தது. அப்பொழுது பாவமானது உள்ளே நுழைந்தப் பின்னர்… 146 தேவன் தோற்கடிக்கப்படமாட்டார், என்ன சம்பவித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டார். அப்பொழுது ஸ்திரீயானவள் பூமியின் மேல் மனுஷர்களை பிறப்பிக்கத் துவங்கினாள். தேவன் நித்திய கிருபையினூடாக யார் இரட்சிக்கப்படுவார்கள் என்று கண்டு, அவர் உங்களை அழைத்தார். “என்னை அனுப்பின பிதா முதலில் ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” “ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” 147 நீங்களோ, “நல்லது, நான் தேவனை தேடினேன். நான் தேவனைத் தேடினேன்” என்று கூறுகிறீர்கள். இல்லை, நீங்கள் ஒருபோதும் தேடவேயில்லை. தேவனே உங்களைத் தேடினார். அந்தவிதமாகத்தான் அது துவக்கத்தில் இருந்தது. 148 அதாவது, “ஓ, பிதாவே, பிதாவே நான் பாவம் செய்துள்ளேன். நீர் எங்கே இருக்கிறீர்?” என்று ஆதாம் கூறிகொண்டிருக்கவில்லை. 149 அது, “ஓ ஆதாமே, ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” என்று பிதாவானவர் கூறிக்கொண்டிருந்ததாயிருந்தது. அதுவே மனிதனுடைய சுபாவமாயிருக்கிறது. அதுவே மனிதனுடைய மரபு வழித் தோன்றலாயுள்ளது. அந்தவிதமகத்தான் அவன் உண்டாக்கப்பட்டிருக்கிறான். 150 “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும்…” அல்லேலூயா! “யாவும் என்னிடத்தில் வரும். நான் அவனுக்கு நித்திய ஜீவனை அளிப்பேன், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்.” என்னே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட, என்னே பரலோக தேவனின் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாக்குத்தத்தம்! நாம் இன்றிரவு பெற்றுக்கொள்ளும்படியாக, “அவர் தம்மில்தாமே ஆணையிட்டார்.” பெரியவர் ஒருவரும் இல்லை. நீங்கள் உங்களைவிட பெரியவர் பேரிலேயே ஆணையிடுவீர்கள். தேவன் தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டார். நாம் அதற்குள் சென்றுகொண்டிருக்கிறோம், எப்படி அவர் அதைச் செய்தார், எப்பொழுது அவர் அதைச் செய்தாரென்றால், அவர் நம்மை எழுப்பி, நம்மை தம்முடைய சொந்த மந்தையாக்கும்படிக்கு தம்மில் தாமே ஆணையிட்டபோதேயாகும், 151 ஓ, இந்தக் காலையில் நம்மால் எவ்வளவு பரிபூரணமாகவும், திடமாகவும் நிற்க முடிகிறது! மரணம் உங்களுடைய முகத்தை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தால், உங்களால் எப்படி பவுலைப் போன்று அதை நோக்கிப் பார்த்து, “மரணமே,! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.” என்று கூற முடியும். அந்நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள். ஏன்? 152 “ஓ, நீங்களா இன்னின்ன காரியத்தை செய்தீர்கள்” எனலாம். 153 “நான் அதை அறிவேன், ஆனால் நான் அவருடைய இரத்தத்தினால் மூடபட்டிருக்கிறேன்” என்று கூற முடியும். அல்லேலூயா! 154 “ஒரே ஆவியினாலே, நாம் யாவரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.” நீங்கள் மெத்தோடிஸ்டுகளாய், பாப்டிஸ்டுகளாய், பிரஸ்பிடேரியன்களாய், நீங்கள் யாராயிருந்தாலும், நாம் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டோம். நமக்கு ஐக்கியம் உண்டு, நாம் தேவனுடைய இராஜ்ஜியத்தின் பிரஜைகளாயிருந்து, “நாம் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல” என்று உறுதியாகக் கூறுகிறோம். 155 அன்றொருநாள் என்னுடைய சிறிய மகள் வந்து, “அப்பா, இந்த சிறு பெண் இன்ன-இன்ன காரியத்தைச் செய்தாள். அவர்கள் இன்ன-இன்ன செய்தனர். நாங்கள் அந்த வீட்டிற்குச் சென்றோம். அப்பொழுது அவர்கள் இன்ன-இன்ன காரியத்தைச் செய்தனர்” என்று கூறினாள். மேலும் நான்…கூறினேன்…அவள், “நாம் ஏன் அதைச் செய்யக் கூடாது?” என்று கேட்டாள். 156 அதற்கு நான், “தேனே, நாம் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல. அவர்கள் தங்களுக்கென்று இந்த உலகத்தில் வாழ்கிறார்கள்.” என்றேன். 157 மேலும் அவள், “நாம் எல்லோரும் அதேவிதமாக நடந்து கொள்ளக் கூடாதா?” என்று கேட்டாள் 158 அதற்கு நான், “தேனே, அவர்கள் உலகத்திற்குரியவர்கள். நாம் அந்த ஜனங்களைப் போன்றவர்கள் அல்ல” என்றேன். 159 வேதம், “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போங்கள் என்று தேவன் சொல்லுகிறார்” என்று உரைத்துள்ளது. பாருங்கள், நீங்கள் அதனுடையவர்களாயிருக்கவில்லை. அந்த புதிய சுபாவம் உங்களுக்குள் வரும்போது, நீங்கள் வெளியே இழக்கப்பட வேண்டியதில்லை. நீங்கள் லோத்தினுடைய மனைவியைப் போல பின்னிட்டுப்போக விரும்புகிறதில்லை. நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் வேறோரு பரிமாணத்தில் இருக்கிறீர்கள். இது உங்களுக்கு குப்பைக் கூளமாகக் காணப்படுகிறது. நாம் வாழ்கிற இந்த மகத்தான, பழம் புகழ் வாய்ந்த அமெரிக்கா அதனுடைய ஒரு பெருங்குழப்பத்தைக் கொண்டதாய் மாறியுள்ளது. ஒவ்வொருகாரியமும் இச்சையும், ஸ்திரீகளுமாய் உள்ளது. ஸ்திரீகள், அவர்கள் உடைஉடுத்துகின்ற விதமும், புருஷர்கள், அவர்கள் நடந்துகொண்டிருக்கிற விதமும், அவர்கள் செய்து கொண்டிருக்கிற காரியங்களும் பாருங்கள், அப்படி செய்துகொண்டு அதன்பின்னரும் தங்களை, “கிறிஸ்தவர்கள்” என்று அழைத்துக் கொள்கிறார்கள். 160 உதாரணமாக, இந்த எல்விஸ் பிரஸ்லி இப்பொழுது போய் பெந்தேகோஸ்தே சபையில் சேர்ந்துகொண்டிருக்கிறார். உண்மையாகவே அங்கேதான் யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்டான். எல்விஸ் கார்டில்லாக் கார்களையும், கோடிக்கணக்கான டாலர்களையும் தன்னுடைய பிறப்புரிமையை விற்றுப் போடுவதற்காகப் பெற்றுக் கொண்டான். ஆர்தர் காட்ஃபிரை-யைப் பாருங்கள். 161 இங்கே லூயிவில்லில் உள்ள ஜிம்மி ஆஸ்பார்னைப் பாருங்கள், அவர் அங்கே பழைய பூகி-வூகி என்ற ஆரவார இசைப்புச் சந்தம் மற்றும் சுழன்று அசைந்து ஆடும் ராக் அண்ட் ரோல் நடனப் பாடல்கள், பழைய வடிகட்டிய முட்டாள்தனமான மற்றும் அசுத்தமான காரியங்களைக் கொண்டவராய் இருக்கிறார். ஆனால் அதே சமயத்தில் ஞாயிறு காலை வேதாகமத்தை எடுத்துக் கொண்டு, பிரசங்க பீடத்தில் நின்று பிரசங்கமும் செய்கிறார். என்னே ஒரு வெட்கக்கேடு! வேதம், “போஜனபீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது” என்று கூறியிருப்பதில் வியப்பொன்றுமில்லையே. ஏன்? நாம் ஒரு பயங்கரமான நாளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோமே! 162 ஜனங்களோ, “ஓ, அவர்கள் மிகவும் பக்தியுள்ளவர்கள்” என்று கூறுகிறார்கள். ஓ! பிசாசு பக்தியுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? காயீன் ஆபேலைப் போல பக்தியுள்ளவனாயிருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? ஆனால் அவன் வெளிப்பாட்டை உடையவனாயிருக்கவில்லை. அதுதான் அது. அவன் வெளிப்பாட்டைப் பெற்றிருக்கவில்லை. ஆம், நாம் எல்லோரும் சபைக்குச் செல்கிறோம், ஆனால் சிலரே ஜீவனைப் பெற்றவர்களாயிருக்கிறார்கள், அவர்களே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டை தங்களுடைய இருதயத்தில் பெற்றுள்ளனர். கரங்குலுக்குவதனால் அல்ல, குதிப்பதனால் அல்ல, சபையில் சேர்ந்துகொள்வதனால் அல்ல. ஆனால் வெளிப்பாடு, தேவன் அவரை வெளிப்படுத்தியிருக்கிறார். 163 அதாவது, “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டதை நோக்கிப் பாருங்கள். 164 அதற்கு அவர்கள், “சிலர் உம்மை ஒரு தீர்க்கதரிசி என்றும், வேறு சிலர் உம்மை எலியா” என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர், “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். 165 அப்பொழுது பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். அது அவனுடைய உதடுகளிலிருந்து வந்ததாயிருக்கவில்லை. 166 அதற்கு அவர், “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. நீ இதை ஏதோ ஒரு வேதாகம நெறிமுறைகளில் அல்லது ஏதோ ஒரு இறையியல் கருத்தரங்கில் ஒருபோதும் கற்கவேயில்லை. நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார். 167 நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருந்தால், இந்தக் காலையில், நீங்கள் சபையைச் சார்ந்தவராயிருக்கிறபடியால், நீங்கள் இழக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருப்பீர்களானால், நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிற காரணத்தால், நீங்கள் நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலையாகி, கிறிஸ்துவுக்குள்ளாக நீங்கள் எல்லா நேரத்திலும் பூரணப்படுதலுக்குள்ளாகிக் கொண்டிருக்கிறீர்கள். தேவனால் ஒரு காரியத்தைக் காண முடியாது. நீங்களோ, “நான் எப்போதாவது ஒரு தவறு செய்வேனா?” என்று கேட்கலாம். நிச்சயமாக, ஆனால் நீங்கள் அதை மனப்பூர்வமாய்ச் செய்கிறதில்லை. 168 இப்பொழுது நாம் இன்னும் ஒரு சில நிமிடங்களில், நாம் அதற்குள்ளாகச் செல்லப் போகிறோம், “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்.” நாம் இன்றிரவு அதற்குள்ளாகச் செல்வோம், ஏனென்றால் இப்பொழுது இது மிகவும் சற்று காலங்கடந்ததாகவே உள்ளது. 169 நாம் இன்னும் இதைக் குறித்த இரண்டிற்கும் மேற்பட்ட வசனங்களை வாசிப்போமாக, அப்பொழுது நாம் இன்னும் சற்று அதிகமாக இதைக் குறித்து புரிந்துகொள்ளலாம். சரி. நல்லது, நாம் இன்றிரவு அதன் பேரில் சரியாகத் துவங்குவோம், 4-வது வசனம். இதை கவனியுங்கள். ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள்,…மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். புரிகிறதா? நாம் இது என்ன என்பதை முன்னும் பின்னும் காண்பிக்கும்படியாக, எபிரெயர் 10-அதிகாரத்திற்குள் அதை எடுத்துச் செல்வோம். 170 நண்பர்களே, “நாம் பூரணராகும்படி கடந்து போவோமாக.” நாம்…நாம் இல்லை…நமக்கு இன்றைக்கு சாக்குபோக்கே கிடையாது. நமக்கு எந்த சாக்குபோக்குமே கிடையாது. பரலோகத்தின் தேவன் இந்தக் கடைசி நாட்களில் பிரசன்னமாகி, அவர் பூமியின் மேலிருந்தபோது, அவர் இதற்கு முன் இங்கிருந்தபோது, அப்பொழுது அவர் செய்த அதேக் காரியங்களையே இப்பொழுதும் செய்துகொண்டிருக்கிறார். நாம் இந்த வேதாகமத்தின் மூலமாக அணுகிக்கொண்டு வருகிற காரணத்தால் அவர் அதை நிரூபித்துள்ளார். இங்கு சபையில் உள்ள நீங்களே இதை அறிவீர்கள். அதாவது அவர் வனாந்திரத்தில் இஸ்ரவேல் புத்திரரோடு செய்த காரியங்களையும், அவர் செய்த அடையாளங்களையும், நாம் ஒவ்வொரு அற்புதமாக, ஒவ்வொரு அடையாளமாக, ஒவ்வொரு அதிசயமாக எடுத்துப் பார்த்துள்ளோம். அவர் இங்கே பூமியின் மேல் இருந்தபோது, மாம்சத்தில் வெளிப்பட்டபோது, அவர் செய்த காரியங்களே, அதேக் காரியங்களே இங்கே நமக்கு மத்தியிலே இன்றைக்கு சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. அதை ரூபகாரப்படுத்த வார்த்தை இங்கே உள்ளது. அதை சரிபடுத்த, அது சரியென்று கூற அந்தக் காரியம் இங்கே உள்ளது. அதேக் காரியத்தைச் செய்வதற்கு தேவனுடைய ஆவியானவர் இங்கே இருக்கிறார், ஆகையால் நாம் சாக்குபோக்கு கூறமுடியாதவர்களாயிருக்கிறோம். நாம் ஜெபம் செய்வோமாக. 171 பரலோகப் பிதாவே! மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் எங்களைச் சூழ்ந்து கொண்டிருக்க, நாங்கள் மற்ற எல்லாருடைய வார்த்தையையும், ஒவ்வொரு காரியத்தையும், ஒவ்வொரு தவறையும், ஒவ்வொரு பொல்லாத வார்த்தையையும், மோசமாய்ப் பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு சிந்தனையையும் தள்ளிவிட்டு, “விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி எங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” ஓ, அவருடைய இணையற்ற மகா பரிசுத்த நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! அவர் எப்படியாய் விழுந்து போன மனிதர்களை மீட்கவும், அவர்களை மீண்டும் தேவனாகிய கர்த்தரின் ஐக்கியத்திற்குள் கொண்டு வரவுமே பூமிக்கு வந்தார். நாங்கள் இதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இப்பொழுது அவருடைய கிருபையினால்…நாங்கள் அவரை ஒரு போதும் தெரிந்துகொள்ளவில்லை, ஆனால் அவர் எங்களைத் தெரிந்துகொண்டார். அவர், “நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, ஆனால் நான் உங்களைத் தெரிந்து கொண்டேன்” என்றார். எப்பொழுது? “உலகத் தோற்றத்திற்கு முன்பே.” 172 அன்புள்ள தேவனே, இந்தக் காலையில் இங்கு அமர்ந்துள்ள சிலர் ஒருகால் இதை வருடக் கணக்கில் தள்ளிப் போட்டிருக்கலாம், ஆனால் இடைவிடாமல் இருதயத்தண்டையிலே ஒரு சிறு தட்டுதல் தட்டிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு கால் சபையில் சேர்ந்து, “நல்லது, இது சரியாயிருக்கும்” என்று எண்ணிக்கொள்ளலாம். பிதாவே, நிச்சயமாகவே, நாங்கள் ஒரு சபையின் பின்னால் மறைந்து கொண்டு நீதிமானாயிருக்க முடியாது என்றும், நாங்கள் நல்லவர்களாக, பொய்யுரைக்காமல், திருடாமல் மற்றும் எந்த மோசமான காரியத்தையும் செய்யாமல் இருக்க முடிந்தாலும், நீதிமானாயிருக்க முடியாது என்று வேதவாக்கியங்கள் அதை இந்தக் காலையில் விளக்கியிருக்கின்றன. 173 ஒரே ஒரு நீதி மாத்திரமே நாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும், அது எங்களுடைய சொந்த நீதியல்ல, ஆனால் அவருடைய நீதியாகும். அவர் எங்களுடைய இரட்சிப்பை பூரணப்படுத்தியிருக்கிறார். ஆகையால் நாங்கள் அவருக்குள் இருக்கின்றபடியால், தேவன் எங்களுடைய தவறுகளை காண்கிறதில்லை. நாங்கள் ஏதாவது காரியத்தை தவறாகச் செய்யும்போது, எங்களுக்குள் இருக்கிற ஒரு ஆவி, “ஓ, பிதாவே, என்னை மன்னியும்!” என்று கூக்குரலிடுகிறது. அப்பொழுது தேவன் அதைக் காண்கிறதில்லை. அது…நாங்கள் கிருபையாய் அவருடனே ஐக்கியத்திற்குள்ளாக கொண்டுவரப்பட்டிருக்கிறோம். நாங்கள் இந்த ஆராதனையை முடிக்கையில், கர்த்தாவே, கிறிஸ்துவின் நாமத்தில் அதை அருளும். ஆமென். 174 அப்படியே ஒரு நிமிடம் நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் என்ன செய்தாலும், அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் இழக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். இதற்கு செவிகொடுங்கள். கொஞ்சங் காலத்திற்கு முன்னர்…நான் இதை இதற்கு முன்பு கூறியிருக்கலாம். இதோ எனக்கு நேர்ந்த ஒரு சிறு அனுபவமாய் இது உள்ளது. 175 நான் ஒஹையாவிலுள்ள டோல்டூ என்ற இடத்தில் இருந்தேன். நான் அங்கு ஒரு எழுப்புதல் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தேன், அங்கு அநேக ஜனங்கள் இருந்தனர். அந்த இடத்தில் உணவக விடுதிகள் இருந்தன என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே அவர்கள் என்னை அந்த தேசத்திற்குள் அழைத்துச் சென்றனர். நான் அங்கே வெளியே இருந்த ஒரு சிறு உணவக விடுதியில் தங்கிக் கொண்டிருந்தேன். 176 நாங்கள் டங்காட் என்ற உணவகத்தில் புசித்துக் கொண்டிருந்தோம். அது ஒரு அற்புதமான இடமாய் இருந்தது, அங்கே கிறிஸ்தவர்களைப் போல, பரிசுத்தமானவர்களாய் காணப்படுகின்ற பெண்மணிகள் இருந்தனர், அவர்கள் முடிந்தளவு சுத்தமானவர்களாயும், உண்மையாகவே அருமையானவர்களுமாய் இருந்தனர். ஞாயிறு வந்த போது நான் பசியாயிருந்தேன். நான் அப்பொழுது உபவாசத்தை முடித்திருந்தேன். எனவே நான் பக்கத்தில் இருந்த மற்றொரு தெருவிற்கு சென்று கொஞ்சம் உணவினை உத்தரவின் பேரில் கொண்டுவர ஒழுங்கு செய்ய விரும்பினேன். அங்கே ஒரு சிறு வீதி அந்த மூலைக்கு அருகில் இருந்தது. அது வழக்கமான, பொதுவான, புசிப்பதற்கான அமெரிக்க ஸ்தலமாயிருந்தது. அங்கிருந்த அந்த சிறு இடத்தில் இருந்த ஒரு சிற்றுண்டிச் சாலை முழு இரவும் திறந்திருந்தது. எனவே நான் அந்த ஞாயிறு பிற்பகல் சுமார் இரண்டு மணிக்கு பிரசங்கிக்கச் செல்வதற்கு முன்னர் அங்கே உள்ளே நடந்து சென்றபோது, நான் மிகவும் திகைப்படைந்து, நான் என்ன செய்வதென்று அறியாமலிருந்தேன். 177 நான் உள்ளே நடந்து சென்றபோது கவனித்த முதல் காரியமே கிட்டத்தட்ட பதினாறு, பதினெட்டு வயது நிரம்பிய ஒரு வாலிபப் பெண், யாரோ ஒரு தகப்பனாரின் ஆசைக்குரியவள், யாரோ ஒரு தாயாரின் ஆசைக் குரியவள் ஒரு வாலிபப் பையன் தன்னுடைய கரத்தை அவள் இடுப்பைச் சுற்றிப் போட்டுக்கொண்டிருக்க, இவள் அவனோடு அங்கே பின்னால் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். அந்த விடுதியில் உள்ள கொடுக்கல்-வாங்கல் இடத்தில் ஒரு கூட்ட வாலிபப்பருவத்தினர் அமர்ந்துகொண்டிருந்தனர். 178 சூதாட்டத்தில் சிறு துளையில் காசு போட்டு விளையாடப் பயன்படுத்தும் ஒரு இயந்திரத்தின் சத்தத்தை நான் கேட்டேன். அப்பொழுது நான் அங்கே நோக்கிப் பார்த்த போது, அங்கு ஒரு காவற்காரன் தன்னுடைய கரத்தை ஒரு ஸ்திரியின் இடுப்பைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு, இந்த சூதாட்ட இயந்திர துளையில் காசு போட்டு விளையாடிக் கொண்டிருந்தான். இப்பொழுது சூதாட்டம் மற்றும் சூதாட்ட இயந்திரத்தின் சிறு துளையில் காசு போட்டு விளையாடும் விளையாட்டு ஓஹையாவில் சட்டத்திற்கு விரோதமானது என்பதை இங்குள்ள குடிமக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அது சட்டத்திற்கு விரோதமானது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இங்கோ சட்டத்தைக் காக்க வேண்டிய காவற்காரரே சூதாட்ட இயந்திரத்தின் துளையில் காசுபோட்டு விளையாடிகொண்டிருந்தார். என்னுடைய வயதினையுடைய ஒரு மனிதன், அநேகமாக திருமணமானவர், பிள்ளைகளையுடையவர், ஒரு பாட்டனராகவுமிருக்கலாம். ஒரு காவற்காரர், ரோந்து பணி மேற்க்கொள்பவர் ஒரு சூதாட்ட இயந்திரத்தில் காசு போட்டு விளையாடிக்கொண்டிருந்தார். அங்கிருந்த அந்த வாலிப…ஒரு வாலிப பருவத்தினருக்கு இது என்ன செய்துள்ளது? இது என்ன செய்துள்ளது? 179 நான் அங்கேயே நின்று பார்த்தேன். நான் உள்ளே நுழைந்ததை எவருமே கவனிக்கவேயில்லை, ஏனென்றால் அவர்கள் எவரையும் கவனியாமல் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்தனர், அங்கிருந்தவர்களில் பாதிபேர் குடித்து வெறித்துமிருந்தனர். ஆகையால் நான் கவனித்துப் பார்த்தேன். அப்பொழுது யாரோ ஒருவர், “மழையானது இந்த ரூபார்ப் என்ற பயிர்களையும் கிழங்கினையும் பாழ்படுத்தும் என்று நீர் நினைக்கிறீரா?” என்று கூறுவதைக் கேட்டேன். நான் இங்கே சுற்றும் முற்றும் நோக்கிப் பார்த்த போது, அங்கே ஒரு பெண்மணி, வயதான பெண்மணி உட்கார்ந்திருந்தாள், உண்மையாகவே…அவளுக்கு அறுபத்தைந்து, எழுபது, அதற்கு நெருக்கமான வயதாகத்தான் இருக்கும். அந்த பரிதாபமான பெண்மணி…தங்களை மிகச் சிறந்த முறையில் உடைஉடுத்திக் காண்பித்துக் கொள்ளுகிற எவரையுமே நான் குற்றப்படுத்துகிறதில்லை. ஆனால் அவள்…அவள் தன்னுடைய தலை முடிக்கு நீல நிறச் சாயம் பூசியிருந்தாள், உண்மையாகவே காண்பதற்கு நீலநிறமாக காணப்பட்டது. தலைமுடியை மேல்வரைக்கும் முழுவதுமாக வெட்டி விட்டு, அதை நீல நிறமாக மாற்றியிருந்தாள். அவள் அதிகமாக முகச்சாயம் பூசியிருந்தாள், அதாவது நீங்கள் கூறுகிற முகச் சாயத்தை தன்னுடைய முகத்தில் பூசியிருந்தாள், அது பெரும் கறைபோன்று காணப்பட்டது. மேலும் அவள் குட்டையான கால் சட்டையை அணிந்துகொண்டிருக்க, அந்த பரிதாபத்திற்குரிய வயோதிகப் பெண்மணி தசைகளில் சுருக்க விழுந்தவளாய்க் காணப்பட, அவளுடைய கால் தசைகளோ அந்த விதமாக தளர்ந்து தொங்கிக்கொண்டிருந்தன. அவள் குடித்து வெறித்திருந்தாள். அவள் ஒரு வயதான மனிதனோடு அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தாள். அது கோடைக் காலமாயிருந்தது, அவளோடிருந்த இந்த மற்றொரு வயோதிகன் சாம்பல் நிறமான அல்லது மங்கிய பழுப்பு நிறமான இராணுவ மேற்சட்டையை அணிந்திருந்தான். அது இந்த விதமாக தொங்கிக்கொண்டிருக்க, ஒரு பெரிய கைக் குட்டையை அவன் தன்னுடைய கழுத்தில் சுற்றியிருந்தான். அவர்கள் இருவருமே குடித்து வெறித்திருந்தனர், அவர்கள் இருவரும் இந்த பரிதாபமான வயோதிக பெண்மணியோடு இருந்தனர். 180 நான் அங்கு நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன், அப்பொழுது நான், “தேவனே, உம்மால் இதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? என்ன-என்ன…அப்படிப்பட்டக் காரியத்தை நீர் எப்படிக் காண்கிறீர்? கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவியாகிய என்னையே இது இவ்வாறு சிந்திக்கச் செய்கிறதானால், உம்மால் எப்படி அதை பார்க்க் முடியும்? ஏன்? நீ அதை வெடித்துச் சிதறச் செய்துவிடுவீர் என்பது போன்று காணப்படுகிறதே. என்னுடைய குட்டி ரெபேக்காளும், சாராளும் அந்தவிதமான ஒரு சூழ்நிலை பாதிப்பின் கீழ் வளருவார்களா? என்னுடைய இரண்டு சிறு பெண்பிள்ளைகளும் இன்றைய புகழ்வாய்ந்த உலகில் இது போன்று நடந்து கொள்கிற ஜனங்களை சந்திக்க நேரிடுமா? தேவனே, என்னால் எப்படி எப்போதுமே…அதாவது என்னால் என்ன செய்ய முடியும்? உண்மையாகவே அது அவருடைய கிருபையாயுள்ளது. அவர்கள் நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டிருந்தால், அவர்கள் அதனண்டைக்கு வருவார்கள். அவர்கள் அதற்கென்று நியமிக்கப்படாதிருந்தால், அவர்கள் அதனண்டை வரமாட்டார்கள். எனக்குத் தெரியாது. அது தேவனைப் பொறுத்ததாயுள்ளது. நான் என்னுடைய பாகத்தையே செய்வேன். 181 நான், “தேவனே, உம்மால் அதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? நீர் அந்தக் காரியத்தை பூமியிலிருந்து துடைத்தழித்துப் போடுகிற மகா பரிசுத்தராய்க் காணப்படுகிறீரே” என்று எண்ணினேன். மேலும் நான், “அங்கே அமர்ந்துள்ள அந்த வயதான பாட்டியைப் பாரும். அங்கே பின்னால் இருக்கிற அந்த வாலிபப் பெண்ணைப் பாரும். இதோ இங்கே ஒரு பெண் நின்றுகொண்டிருக்கிறாள், அநேகமாக அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அந்த காவல்காரன் தன்னுடைய கரத்தை அந்த பெண்ணின் இடுப்பில் சுற்றிக் கொண்டு, சூதாட்டத்திற்கு பயன்படுத்தும் இயந்திரத்துளையில் காசு போட்டு சூதாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறான். அங்கோ சட்டத்தைக் காக்க வேண்டியவனே விளையாடிகிறானே. தேசமோ சீர்குலைந்து போய்விட்டது. தாய்மைத்தன்மையும் ஒழிந்துபோய்விட்டது. இதோ பெரியவர்களும் சீர்கேடாய் போய்விட்டனர். ஒரு வாலிபப் பெண் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், அவள் சீர்கேடாய் போய் விட்டாள். சபையில் அல்லது வேறு எங்கோ இருக்க வேண்டிய பையன்களை எப்படியிருக்கிறார்கள் என்று பாரும்” என்று கூறிக் கொண்டேன். 182 அப்பொழுது நான், “ஓ, தேவனே, என்னால் என்ன செய்ய முடியும்? நான் இங்கே இந்த பட்டிணத்தில் இருந்துகொண்டு, என் முழு இருதயத்தோடு அதற்கு எதிராக கூக்குரலிடுகிறேன். அவர்கள் அதை பொருட்படுத்தாமல், அது அவர்களுக்கானதாய் இல்லாதது போல…கருதி நடந்து சென்று விடுகிறார்கள்” என்று கூறிக்கொண்டேன். நான், “தேவனே இது என்ன?” என்று எண்ணியவாறு கேட்டுக் கொண்டேன். 183 அதன்பின்னர் ஒரு சிந்தனை இவ்வாறு உண்டானது, அதாவது நான் அவர்களை அழைக்காதிருந்தால், அவர்களால் எப்படி வர முடியும்? பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். ‘நீங்கள் கண்களிலிருந்தும் காணமுடியாதவர்களாயும், காதுகள் இருந்தும் கேட்க முடியாதவர்களாயிருக்கிறீர்கள்’” என்பதாய் இருந்தது. 184 மேலும் நான், “எழுப்புதல் கூட்டத்திற்கு பதிலாக ஜனாதிபதி பட்டணத்திற்கு வருவாரானால், அப்பொழுது எல்லோரும் வருவார்கள். ஓ, நிச்சயமாகவே, அது உலகப்பிரகாரமானதாயுள்ளதே” என்று எண்ணினேன். 185 அதன்பின்னர் நான், “தேவனே, எப்படியாவது நீர் ஏன் இயேசுவை அனுப்பி, அதை அழித்துப் போடும்படிக்குச் செய்யக் கூடாதா? அதை முற்றிலுமாய் அழித்துப் போட்டு, அது அழிந்து போய்விடச் செய்யக் கூடாதா?” என்று சிந்திக்க முற்பட்டேன். 186 அப்பொழுது எனக்கு முன்பாக ஏதோ ஒன்று அசைவதை நான் காணத் துவங்கினேன். அது வட்டமான ஒன்று இந்த விதமாகச் சுழலுவதைப் போன்றுக் காணப்பட்டது. நான் அதைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். அதன்பின்னர் உலகம் சுற்றி, சுற்றி சுழலுவதையும் நான் கண்டேன். நான் அதை கவனித்துப் பார்த்தபோது, அங்கேயிருந்து ஏதோ ஒன்று தெறித்துக் கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்தபோது, அது ஒரு சிவப்பான தெளிப்பாயிருந்தது, உலகத்தைச் சுற்றிலும் தெளித்த சிவேரென்று இருந்த இரத்தமாயிருந்தது. அது ஒரு வால் நட்சத்திரம் போன்று சுழன்று கொண்டிருந்தது. அது இந்தவிதமாக சுழன்று கொண்டிருந்தது. அப்பொழுது நான் இந்த சுழலை நோக்கிப் பார்த்தேன். பின்னர் அதற்கு மேலே இயேசுவானவரை நான் தரிசனத்தில் கண்டேன். அவர் கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நான் இங்கே கீழே பூமியின் மேல் நின்றுகொண்டு, நான் செய்யக் கூடாதக் காரியங்களை செய்து கொண்டிருந்ததை நானேக் கண்டேன். ஒவ்வொரு முறையும் நான் பாவம் செய்தபோது, தேவன் என்னை கொன்று போட்டிருக்க வேண்டும், “ஏனென்றால், அதைப் புசிக்கும் நாளிலே, நீ சாவாய்” என்று கூறியிருந்தார். தேவனுடைய பரிசுத்தமும், நீதியும் நீங்கள் மரிக்க வேண்டும் என்று வேண்டுகிறது. அப்பொழுது நான் அங்கே நோக்கிப் பார்த்தேன். மேலும் நான் தொடர்ந்து என்னுடைய கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தேன். நான், “நான் இல்லை…நான் ஒருபோதும் உறங்கச் செல்லவில்லையே. நான்…இது ஒரு தரிசனமாயுள்ளது. இது ஒரு தரிசனம் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்” என்று கூறிக்கொண்டேன். 187 நான் அந்த வாசலின் பின்னே நின்று கொண்டிருந்தபோது, அதை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்னுடைய சொந்த பாவங்கள் மேலே வருகிறதை நான் கண்டேன். ஒவ்வொரு முறையும் அது சிங்காசத்திற்கு வர ஆரம்பிக்கும்போது, அவருடைய இரத்தமானது ஒரு காரின் மீது உள்ள முட்டுத்தாங்கியைப் போன்று செயல்படுகிறது. அது அதனைக் கவ்வி, அதைக் குலுக்க, அப்பொழுது இரத்தமானது அவருடைய முகத்தில் வழிந்தோடுவதை நான் காண்பேன். அப்பொழுது அவர் தம்முடைய கரங்களை உயர்த்தி, “பிதாவே, அவனை மன்னியும், அவன் செய்து கொண்டிருப்பது என்னவென்பதை அவன் அறியாதிருக்கிறான்” என்று கூறினதை நான் கண்டேன். 188 நான் மீண்டும் ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய, அது அவரை மீண்டும் அசைத்து, அதை மோதி தகர்த்ததைக் கண்டேன். ஆனால் தேவன் என்னை அப்பொழுதே கொன்று போட்டிருந்திருப்பார், ஆனால் அவருடைய இரத்தம் என்னைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தது. அது என்னுடைய பாவங்களை பிடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது நான், “ஓ, தேவனே, நான் அதைச் செய்தேனா? நிச்சயமாகவே அது நானாயிருக்கவில்லையே” என்று எண்ணினேன். ஆனால் அதுவோ நானாகவேயிருந்தது. 189 அதன் பின்னர் நான் இந்த விதமாக நடந்து அங்கிருந்த அந்த அறையினூடாக சென்று கொண்டிருந்ததைப் போன்றிருக்க, நான் அவருக்கு அருகாமையில் நடந்து சென்றேன். அப்பொழுது அங்கு ஒரு புத்தகம் இருந்ததையும், அதில் என்னுடைய பெயர் இருந்ததையும், எல்லாவிதமான கறுப்பு எழுத்துக்களினாலும் அதன் குறுக்கே எழுதப்பட்டிருப்பதையும் நான் கண்டேன். அப்பொழுது நான், “கர்த்தாவே, நான் இதை செய்ததற்காக வருந்துகிறேன். என்னுடைய பாவங்களே நீர் அதைச் செய்ததற்கு காரணமாயிருந்ததா? உலகத்தைச் சுற்றிலும் நான் உம்முடைய இரத்தத்தை சுற்றித் தெறிக்க செய்தேனா? கர்த்தாவே, நான் உமக்கு இதைச் செய்தேனா? நான் அதைச் செய்ததற்காக மிகவும் வருந்துகிறேன்” என்றேன். அப்பொழுது அவர் கரத்தை நீட்டினார். நான், “நீர் என்னை மன்னிப்பீரா? நான் செய்ய வேண்டும் என்று கருதி செய்யவில்லை. நான்…நீர் எனக்கு உதவி செய்வீரேயானால், உம்முடைய கிருபையினால் நான் ஒரு மேலான பையானாயிருக்க முயற்ச்சிப்பேன்” என்றேன். 190 அப்பொழுது அவர் தம்முடைய கரத்தை எடுத்து, தம்முடைய பக்கவாட்டில் தட்டி, அதை தம்முடைய விரலினால் தொட்டெடுத்து, “மன்னிக்கப்பட்டது” என்று என் புத்தகத்தில் எழுதி, அதை அவருக்குப் பின்னால் உள்ள மறதியென்னும் கடலில் வீசியெறிந்தார். நான் அதை சற்று கவனித்துப் பார்த்தேன். அப்பொழுது அவர், “இப்பொழுது, நான் உன்னை மன்னிக்கிறேன், ஆனால் நீயோ அவளை ஆக்கினைக்குட்படுத்த விரும்புகிறாய்” என்றார். புரிகிறதா? மேலும், “நீ மன்னிக்கப்பட்டிருக்கிறாய், ஆனால் அவளைக் குறித்து என்ன? நீ அவளை அடிக்க வேண்டுமென்றிருக்கிறாய். நீ அவள் ஜீவிக்க வேண்டுமென்று விரும்பவில்லையே” என்றார். 191 நானோ, “ஓ தேவனே, என்னை மன்னியும். நான் அதை அவ்வாறு நினைக்க வேண்டும் என்று கருதவில்லை. நான் அதைச் செய்ய வேண்டும் என்று விரும்பவில்லை. நான்—நான்—நான் அதைச் செய்ய விரும்பவேயில்லை” என்று எண்ணினேன். 192 மேலும், “நீ மன்னிக்கப்பட்டிருக்கிறாய். நீ அதை சரியென்று உணருகிறாய். ஆனால் அவளைக் குறித்து என்ன? அவளுக்கும் கூட அது தேவையாயிருக்கிறது. அவளுக்கு அது தேவைப்படுகிறது” என்றார். 193 அப்பொழுது நான், “நல்லது, தேவனே, நீர் யாரை அழைத்திருக்கிறீர், நீர் யாரை அழைத்திருக்கவில்லை என்பதை நான் எப்படி அறிவேன்? ஒவ்வொருவரிடத்திலும் பேசுவதே என்னுடைய வேலையாயிருக்கிறது” என்று எண்ணினேன். 194 ஆகையால் தரிசனம் என்னை விட்டுச் சென்றபோது, நான் அவளிடத்தில் நடந்து சென்றேன். அப்பொழுது நான், “பெண்மணியே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அப்பொழுது அவளோடிருந்த இரண்டு மனுஷரும் கழிவறைக்குச் சென்றிருந்தனர். அவர்கள்…உங்களுக்குத் தெரியுமா? அவள் அங்கே அமர்ந்து விக்கிக்கொண்டும், சிரித்துக்கொண்டுமிருந்தாள். மேஜையின் மீதோ விஸ்கி என்ற மதுபான புட்டி இல்லை பீர் என்ற மதுபானம் இருந்தது, அவர்களோ அங்கு அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். நான் அவளண்டை நடந்து சென்றேன். அப்பொழுது நான், “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவளோ, “ஓ, ஹலோ” என்றாள் அப்பொழுது நான், “நான் உட்காரலாமா? என்று கேட்டேன். அதற்கு அவளோ, “ஓ, எனக்கு மது அருந்த துணை இருக்கிறார்கள்” என்று கூறினாள். அப்பொழுது நான், “சகோதரியே, நான் அந்தவிதமான காரியத்திற்காக அமரலாமா என்று கேட்கவில்லை” என்றேன். நான் அவளை “சகோதரியே” என்று அழைத்தபோது, அவள் என்னை நோக்கிப் பார்த்தாள். அப்பொழுது அவள், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு நான், “நான் ஒரு நிமிடம் உட்கார்ந்து கொள்ளலாமா?” என்று கேட்டேன். அப்பொழுது அவள், “தாரளமாக நீங்கள் உட்காரலாமே” என்று கூறினாள். எனவே நான் அப்பொழுது அமர்ந்தேன். மேலும் என்ன சம்பவித்திருந்தது என்பதை நான் அவளிடத்தில் கூறினேன். அப்பொழுது அவள், “உங்களுடைய பெயர் என்ன?” என்று கேட்டாள். அதற்கு நான், “பிரான்ஹாம்” என்றேன். அப்பொழுது அவள், “நீர்தான் அங்குள்ள அந்த அரங்கில் இருப்பவரா?” என்று கேட்டாள். அதற்கு நான், “ஆம், அம்மா” என்றேன். 195 அப்பொழுது அவள், “நான் அங்கு வரவேண்டுமென்றிருந்தேன்” என்றாள். மேலும் அவள், “திரு. பிரான்ஹாம் அவர்களே, நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டேன்” என்றாள். அவள் தொடர்ந்து, “கிறிஸ்தவர்களாயிருக்கிற இரண்டு வாலிபப் பெண்பிள்ளைகள் எனக்கு உண்டு. ஆனால் குறிப்பிட்ட, குறிப்பிட்ட காரியங்கள் சம்பவித்தன” என்றாள். எனவே அது முதற்கொண்டு அவள் தவறான பாதையில் போகத் துவங்கிவிட்டாளாம். 196 அப்பொழுது நான், “ஆனால் சகோதரியே, எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை, இரத்தமோ இன்னமும் உங்களைச் சுற்றிலும் இருக்கிறதே. இந்த உலகம் இரத்தத்தினால் மூடப்பட்டுள்ளது” என்றேன். அப்படியில்லையென்றால், தேவன் நம் ஒவ்வொருவரையும் கொன்று போடுவார். அந்த இரத்தம் கடந்து செல்லும்போது, நியாயத்தீர்ப்பையே நோக்கிப் பார்க்க முடியும். ஆனால் இப்பொழுது, நீங்கள் அந்த இரத்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் மரித்தால், நீங்கள் அப்பாலுள்ள அந்த ஸ்தலத்திற்கு செல்லுகிறீர்கள், அப்பொழுது உங்களுக்கான எந்த செயல்பாடும் அங்கு இல்லை. இன்றைக்கு உங்களுடைய இடத்தில் இரத்தம் செயல்புரிகிறது. நான், “பெண்மணியே, நிச்சயமாக, இன்னமும் இரத்தம் உங்களை மூடியுள்ளது. உங்களுடைய சரீரத்தில் உங்களுக்கு சுவாசம் உள்ள வரை அந்த இரத்தம் உங்களை மூடியுள்ளது. ஆனால் என்றோ ஒரு நாள் உங்களுடைய சுவாசம் இங்கிருந்து செல்லும்போது, ஆத்துமாவும் வெளியே செல்கிறது, அப்பொழுது நீங்கள் அந்த இரத்ததிற்கு அப்பால் செல்கிறீர்கள், அங்கே நியாயத்தீர்ப்பைத் தவிர வேறோன்றுமே கிடையாது. எனவே நீங்கள் மன்னிப்பை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை உடையவர்களாயிருக்கும்போது…ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றேன். அதன் பின்னர் நான் அவளுடைய கரத்தைப் பிடித்தேன். 197 அப்பொழுது அவள் அழுதுகொண்டே, “திரு.பிரான்ஹாம் அவர்களே, நான் குடித்துக் கொண்டிருக்கிறேனே” என்றாள். 198 அதற்கு நான், “பரவாயில்லை, ஏதோ ஒன்று, உங்களிடத்தில் வந்து இதைக் கூறும்படிக்கு என்னை எச்சரித்தது” என்றேன். நான், “சகோதரியே தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்னே உங்களை அழைத்தார். நீங்கள் தவறான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை இன்னும் மோசமாக செய்துகொண்டேயிருக்கிறீர்கள்,” என்றேன். 199 அப்பொழுது அவள், “அவர் என்னை ஏற்றுக்கொள்வார் என்று நீர் நினைக்கிறீரா?” என்று கேட்டாள். 200 அதற்கு நான், “முற்றுலுமாக, அவர் உங்களை ஏற்றுக் கொள்வார்” என்றேன். 201 அப்பொழுது அங்கே அவள் முழங்காற்படியிட, நாங்களும் அந்த தரையிலேயே முழங்காற்படியிட, பண்டைய-கால ஜெப கூட்டமே நடந்தது. அந்த காவற்காரன் தன்னுடைய தொப்பியைக் கழற்றி, தலைவணங்கி முழங்காற்படியிட்டான். அப்பொழுது நாங்கள் அந்த இடத்தில் ஒரு ஜெபக் கூட்டமே நடத்தினோம். ஏன்? தேவன் இராஜாதிபத்தியமுள்ளாவராயிருக்கிறார். “இந்த செத்த கிரியைகளை ஒருபுறம் தள்ளிவிட்டு, நாம் பூரணராகும்படி கடந்து போவோமாக.” 202 நாம், “நான் சபையைச் சேர்ந்தவன்; நான் அதைச் சார்ந்தவன்” என்ற இந்த யாவும் முடிவுற்ற கட்டத்திலுருந்து, பூரணராகும் அந்த மண்டலத்திற்குள்ளாக கடந்து செல்வோமாக. நாம் பூரணராகும்படி கடந்து செல்வோமாக. 203 என்னுடைய பாவியான நண்பனே, நீ இன்றைக்கு இரத்தமில்லாமல், இரட்சிப்பில்லாமல், கிருபையில்லாமலிருந்தால், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உங்களை பிடித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள், “நான் எல்லா நேரத்தில் இவ்வாறு இருந்துள்ளேன்” என்று கூறலாம். ஆனால் ஒரு நாள் ஒன்றுமே உங்களுக்காக செயல்படாத இடத்திற்கு நீங்கள் போகப் போகிறீர்கள். நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், இப்பொழுது நாம் ஜெபம் செய்வோமாக. 204 இன்றைக்கு இங்கே, “தேவனே என்னிடத்தில் இரக்கமாயிரும், நான் தவறு செய்துள்ளேன் என்பதை நான் தெளிவாக உணருகிறேன்” என்று கூறக் கூடிய எவரேனும் இருக்கிறார்களா? ஒரு கால் நீங்கள் சபையில் சேர்ந்திருக்கலாம். அது சரிதான். ஆனால் நீங்கள் கிறிஸ்துவின் கிருபையை பெற்றுக் கொள்ளாமலிருந்தால், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறுவீர்களா? திருவாளரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பெண்மணியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. வேண்டாம்…அங்கே பின்னால் உள்ள ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை, உம்மையும் ஆசீர்வதிப்பாராக. ஆம், மிகவும் பின்னால் உள்ள உம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி. நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “தேவனே, என்னிடத்தில் இரக்கமாயிரும்” என்று கூறுங்கள். 205 நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், நான் சபையைச் சார்ந்தவன். ஆம், நான் நல்லவனாக இருக்க முயற்ச்சித்துள்ளேன், ஆனால் எனக்குத் தெரியவில்லை, நான் அவ்விதமாக இருப்பது போன்று தென்படுகிறேன், என்னால் அதைச் செய்ய முடியவில்லை” என்று கூறலாம். ஓ, பரிதாபமான யாத்தீரிகனே, பரிதாபமான தளர்வுற்ற நிலையில் உள்ள நண்பனே, நீ உண்மையாகவே இன்னும் அந்த தரிசனத்தை ஒரு போதும் கண்டதேயில்லை. 206 நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், நான் சத்தமிட்டேன். நான் அந்நிய பாஷைகளில் பேசியிருக்கிறேன். நான் இந்த எல்லாவற்றையும் செய்துள்ளேன்,” என்று கூறலாம். அது உண்மையாயும் கூட இருக்கலாம். சரி, பரவாயில்லை, அதற்கு எதிராகக் கூறுவதற்கு ஒன்றுமேயில்லை. ஆனால் என்னுடைய அருமையான இழக்கப்பட்ட நண்பனே, அந்நிய பாஷையில் பேசுவது அல்லது குலுக்குவது அல்லது கரங்களை குலுக்குவது அல்லது ஞானஸ்நானம்பண்ணப்படுவது, அதெல்லாம் சரிதான். ஆனால் அவரை அறிந்துகொள்வதென்பது அந்த ஒரு நபரையே அறிந்துகொள்வதாயிருக்கிறது. “அவரை அறிந்துகொள்வதே ஜீவனாயுள்ளது.” 207 நீங்கள், “நான் உண்மையாகவே வேதாகமத்தை நன்கு அறிந்துள்ளேன்” என்று கூறலாம். நல்லதுதான், வேதாகமத்தை அறிந்துகொள்வது ஜீவனாயிருக்கவில்லை. “அவரை அறிந்துகொள்வதென்பது” தனிப்பட்ட பிரதிபெயர், “அவரை, கிறிஸ்துவை அறிந்து கொள்ளுதலாகும்,” அதாவது அவர் உங்களை மன்னித்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். மீண்டும் உங்களில் வேறு யாரேனும் உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ள சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னால் உள்ள வாலிபனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ள சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அங்கே மிகவும் பின்னால் உள்ள உம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. அது உண்மை. “அவரை அறிந்து கொள்வதே ஜீவனாய் உள்ளது.” “சகோதரன் பிரான்ஹாம், ஜெபத்தில் என்னை நினைவு கூருங்கள். நான் இப்பொழுது, இங்கே என்னுடைய இருக்கையிலிருந்தே கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளப் போகிறேன்” என்று கூறுங்கள். 208 நீங்கள், “கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய இருதயத்திற்குள்ளாக வாரும், எனக்குள்ளாக அந்த சமாதனத்தையும், அந்த இனிமையையும் தாரும்” என்று கூறுங்கள். சபைக்குப் போய், உங்களால் முடிந்தளவு இசை இசைத்து, மேலும் கீழுமாக நடனமாடி, சபையின் தூண்களுக்கு இடைபட்ட நடைபாதையினூடாக ஓடி, பின்னர் வீட்டிற்கு திரும்பிப் போய், கவலைப்பட்டு, சண்டையிட்டு, வம்படிப்பது, அது கிறிஸ்து அல்ல. நீங்கள் சபைக்குப் போய், அமர்ந்து, எப்படி பாலம் வண்ணந்தீட்டப்படப் போகிறது அல்லது அதைப் போன்ற மற்ற ஏதோ ஒரு காரியத்தைக் குறித்த ஒரு சிறு பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு, ஒருபோதும் வார்த்தைக்கு செவிகொடுக்காதிருக்கிறீர்கள். வார்த்தையே ஜீவனைக் கொண்டு வருகிறது. அது வித்தாய் உள்ளது. உங்களுக்கு சமாதானம் தேவையில்லையா? 209 நீங்கள் மரிப்பதைக் குறித்து மனக்கவலையடைந்துள்ளீர்களா? இன்றைக்கு உங்களுக்கு ஒரு மாரடைப்பு உண்டாகலாம் என்று அது உங்களை கவலைப்படுத்துகிறதா? இல்லையென்றால் நீங்கள், “நான் இந்தப் பாதையின் முடிவில் கர்த்தராகிய இயேசுவோடிருக்கப் போகிறேன்” என்று கூறுவதற்கு நீங்கள் களிகூருவீர்களா? நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லையென்றால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நாங்கள் உங்களுக்காக ஜெபத்தில் வேண்டிக் கொள்ளப் போகிறோம். ஆம், சகோதரரே, உங்களுக்காகவும் கூட. 210 சரி, இப்பொழுது உங்களுடைய இருதயத்திலிருந்து பாடுங்கள். நான் அப்படியே எந்த ஒரு முறையீடுமின்றி உள்ளேன், ஆனால் அந்த உம்முடைய இரத்தம் (யாருக்காக) எனக்காக சிந்தப்பட்டது, ஏனென்றால் நான் விசுவாசிப்பேன் என்று நான் வாக்களிக்கிறேன், ஓ ஆட்டுக்குட்டியே, ஓ தேவாட்டுக் குட்டியே, நான் வருகிறேன், நான் மென்மையாய், தயவாய் வருகிறேன். அப்படியே… விசுவாசத்தினால் அவரண்டை அப்படியே நடந்து செல்லுங்கள். அவர் உங்களுக்கு பக்கத்தில் அங்கே நின்று கொண்டிருக்கிறார் என்று விசுவாசியுங்கள். அவர் இங்கு இருக்கிறார். …காத்திராமல் என் ஆத்தும கரையைப் போக்க (இப்பொழுது எந்த அளவு?) ஒவ்வொன்றையும்…(கோபம், மனக்காழ்ப்பு) அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் போக்கக் கூடியது, ஓ, ஆட்டுக்குட்டியே… 211 “விசுவாசத்தினால் இந்தக் காலையில் நான் சிலுவையண்டை நடந்து செல்வேன். நான் பாரங்களை கீழே வைக்கிறேன். நான் வருகிறேன்.” அங்கு பின்னால் உள்ளவர்களே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நன்றாயுள்ளது. [சகோதரன் பிரான்ஹாம் “நான் பாவிதான்” என்ற பாடலை வாய்த்திறாவாமல் ரீங்காரம் செய்கிறார்—ஆசி.] இப்பொழுது அலட்சியமாயிராதேயுங்கள். அனல் மூண்டவர்களாய், இனிமையாய் சிலுவையண்டை நடந்து செல்லுங்கள். 212 பழைய ஏற்பாட்டில் அவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்தனர். அவர்கள் பாவம் செய்திருந்தனர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் அதை கற்பனைகளின் மூலமாக அறிந்துகொண்டனர். இப்பொழுது தேவன் உங்களுடைய இருதயத்தில் பேசினபடியால் நீங்கள் அதை அறிந்துள்ளீர்கள். அப்பொழுதோ, “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக. நீ இன்னின்ன காரியத்தை செய்யக் கூடாது” என்பதை பார்க்க அவர்கள் கற்பனைகளை எடுத்துப் பார்த்தனர். அவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியை கொண்டு சென்று, தங்களுடைய கரங்களை அதன் மேல் வைக்க, ஆசாரியன் அதனுடைய தொண்டையை துண்டிப்பான். அப்பொழுது அந்த சிறு ஆடு உதைத்துக் கொண்டு, இரத்தம் வடித்துக்கொண்டு, கத்திக்கொண்டு மரித்துக்கொண்டிருந்தது. அவனுடைய கரங்கள் முழுவதும் இரத்தத்தால் மூடப்பட்டிருந்தது. அவனுக்குப் பதிலாக அந்த ஆட்டுக்குட்டி மரித்தது. ஆனாலும் அவன் அதேப் பாவத்தை மீண்டும் செய்யும்படியான அதே வாஞ்சையோடு தான் வெளியே நடந்து சென்றான். 213 ஆனால் இந்த இடத்திலோ நாம் விசுவாசத்தினாலே கிருபையினூடாக வருகிறோம். தேவன் நம்மை அழைத்தார். நாம் நம்முடைய கரங்களை தேவாட்டுக் குட்டியின் தலையின் மேல் வைக்கிறோம். நாம் அடிகின்ற அந்த சுத்தியலின் சத்தத்தைக் கேட்கிறோம். நாம், “நான் தாகமாயிருக்கிறேன்; எனக்கு தண்ணீர் கொடுங்கள். பிதாவே, இந்த பாவம் அவர்கள் மேல் சுமராதிருப்பதாக; தாங்கள் செய்கிறது இன்னதென்று அவர்கள் அறியாதிருக்கிறார்கள்” என்று கூறுகிற அந்தச் சத்தத்தைக் கேட்கிறோம். புரிகிறதா? விசுவாசத்தினாலே நம்முடைய ஸ்தானத்தில் அங்கே உள்ள அவருடைய மரணத்தை உணருகிறோம். அப்பொழுது நம்முடைய இருதயத்தின் ஆழத்தில் சமாதானம் தோன்றி நிலவ, ஒரு சத்தம், “நீ இப்பொழுது மன்னிக்கப்பட்டிருக்கிறாய். போ, இனி பாவம் செய்யாதே” என்று கூறுகிறது. அப்பொழுது கிருபையினால் எப்படியாய் நாம் அதேப் பாவ வாஞ்ச்சையில்லாமல் வெளியே நடந்து செல்கிறோம்., ஆனால் இனி ஒருபோதும் பாவம் செய்யாத அல்லது தவறான எந்தக் காரியத்தையும் செய்யாத ஒரு வாஞ்சையோடு நடந்து செல்கிறோம். ஆகையால் எல்லா புத்திக்கும் மேலான சமாதானம் நம்முடைய இருதயத்தில் பிரவேசித்துள்ளது. நாம் ஒவ்வொருவரும் ஒன்று சேர்ந்து ஜெபிக்கையில், நீங்கள் அதை இப்பொழுது பெற்றுக்கொள்வீர்களாக. 214 பரலோகப் பிதாவே, அவர்கள் விசுவாசத்தினாலே கிருபையினூடாக வந்து கொண்டிருக்கிறார்கள். சுமார் பன்னிரெண்டு கரங்கள் மேலே உயர்த்தப்பட்டன. அவை இந்த செய்தியின் கனிகளாயிருக்கின்றன. அவர்கள் உம்மண்டை வருகிறார்கள். அவர்கள் விசுவாசிக்கிறார்கள். கர்த்தாவே, நானும் கூட அவர்கள் விசுவாசிக்கிறார்கள் என்பதில் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். உண்மையாகவே பரிசுத்த ஆவியானவர் அவர்களிடத்தில் பேசினார் என்றே நான் நம்புகிறேன். விசுவாசத்தினாலே அவர்கள் யாக்கோபுடைய ஏணியில் இப்பொழுது ஏறி சிலுவையின் கீழே வந்து, அங்கே தங்களுடைய எல்லா பாவங்களையும் கீழே வைத்துவிட்டு, “கர்த்தாவே, இது எனக்கு மிகவும் அதிக பாரமானதாய் உள்ளது. என்னால் இனிமேல் இதை சுமக்கவே முடியாது. எனவே என்னுடைய பாவபாரத்தை எடுத்துப் போடுவீரா? அவ்வண்ணமாக பாவம் செய்ய வேண்டும் என்ற வாஞ்சையை என்னுடைய இருதயத்திலிருந்து எடுத்துப் போடுவீரா? நான் விசுவாசத்தினாலே இந்நாளில் உம்மை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வேனாக. நான் இனிமேல் யாத்திரையின் முடிவுமட்டாய் உள்ள பாதையின் ஒவ்வொரு மைலிலும் உம்மையே பின்பற்றி வருவேன். நான் ‘பூரணராகும்படிக்கு கடந்து போவோம்’ என்பதன் பொருள் என்ன என்பதின் கண நேரக் கண்ணோட்டத்தையும், அது சபைக்கு செல்வதல்ல என்பதையும், ஞானஸ்நானம் போன்ற செத்த கிரியைகளின் வேர்கள் அல்ல என்பதையும் புரிந்து கொள்வேன். ஆனால் நான் இனிமேல் ஒன்றுமில்லாமற்போக, கிறிஸ்து எனக்குள்ளாக ஜீவிக்கும்படிக்குச் செல்லவே விரும்புகிறேன்” என்று கூறுகிறார்கள். 215 ஓ இயேசுவே இந்தக் காலையில் செய்த பிழைக்கு மனம் வருந்தும் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இதை அருளும். தங்களுடைய கரங்களை உயர்த்தின ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வார்களாக, ஏனென்றால் நீரே அதை வாக்களித்தீர். அவர்கள் ஒரு பகிரங்கமான ஏற்றுக்கொள்ளுதலைச் செய்தனர். அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள். அவர்கள் எல்லா புவிஈர்ப்பு விசையின் விதிகளையும் மீறிவிட்டனர். அவர்கள் விஞ்ஞானம் தனக்குத்தானே வெட்கத்தை உணரும்படி செய்துவிட்டனர், ஏனென்றால் விஞ்ஞானமோ, “உங்களுடைய கரங்கள் கீழே தொங்க வேண்டும்” என்று கூறுகிறது. அது பூமியை நோக்கியவாறு தரித்திருக்க வேண்டும், ஏனென்றால் புவிஈர்ப்பு சக்தி அதை கீழே நோக்கி இழுக்கிறது என்பதை விஞ்ஞானத்தில் உள்ள எந்த காரியமும் நிரூபிக்கும். ஆனால் அவர்களுக்குள்ளிருந்த ஒரு ஆவியே ஒரு தீர்மானத்தைச் செய்தது, அவர்கள் புவிஈர்ப்பு விசையின் விதிமுறைகளை எதிர்த்து மீறியே தங்களுடைய கரங்களை உயர்த்தினர். கர்த்தாவே, நீர் அதைக் கண்டீர். நீர் புத்தகத்தில் அவர்களுடைய பெயரை எழுதும். பழைய புத்தகத்தில் “மன்னிக்கப்பட்டது” என்று எழுதப்பட்டு, இப்பொழுது அது பின்னால் உள்ள மறதியின் கடலில் எறியப்பட்டு, இனி ஒருபோதும் அது நினைவு கூரப்படாமலிருப்பதாக. அவர்கள் அன்பான, இனிமையான கிறிஸ்தவர்களாக உம்மைச் சேவிக்கும்படிக்கு இன்றைக்கே முன்னோக்கிச் செல்வார்களாக. அநேகர் தங்களுடைய கரத்தை உயர்த்தாமலுமிருக்கலாம், ஆனால் அவர்களுக்கும் கூட அதை அருளும். 216 கர்த்தாவே, பரிசுத்தவான்கள் இன்னும் சற்று நெருக்கமாக உம்மண்டை சஞ்சரிக்கட்டும், ஏனென்றால் நாங்கள் நேற்றைய தினத்தைவிட இன்னும் ஒரு நாள் பரலோக வீட்டிற்கு அருகாமையிலிருக்கிறோம். கர்த்தாவே, நீர் எங்களோடிரும், ஏனென்றால் நாங்கள் இதை கிறிஸ்துவினுடைய நாமத்தில் அவருடைய மகிமைக்காக வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.